தெரிந்து செயல்வகை -1

தெரிந்து செயல்வகை -1

திருக்குறளின் 47வது அதிகாரமான தெரிந்து செயல்வகையிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கப்போபிறோம். தெரிந்து செயல்வகை என்றால் செய்யப் போகும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறனைக் குறிப்பதாகும். செய்யும் செயல் சிறியதோ அல்லது பெரியதோ அதைத் திட்டமிட்டு ஆராய்ச்சி செய்தபின் முயற்சிக்க வேண்டும்.

  • முதல் குறள்.

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்
“.
இதில்
அழிவதூஉம்
இதன் பொருள்
ஒரு செயல் செய்யும்போது அதனால் வரும் அழிவையும்.
அடுத்து
ஆவதூஉம்
இதன் பொருள்
பின் வரும் விளைவையும்.
அடுத்து
ஆகி வழிபயக்கும் ஊதியமும்
இதன் பொருள்
ஆன பின்பு உண்டாகும் ஊதியத்தையும்.
அடுத்து
சூழ்ந்து செயல்
இதன் பொருள்
ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

அதாவது
ஒரு செயல் செய்யும்போது அதனால் வரும் அழிவையும், பின் வரும் விளைவையும், ஆன பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

தெரிந்து செயல்வகை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.

  • இரண்டாவது குறள்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்
“.
இதில்
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு’
இதன் பொருள்
தான்னோடு சேர்ந்தவர்களிடம் ஆலோசித்துச் செய்யும் செயலை ஆராய்ந்து திட்டமிட்டு செய்வோர்க்கு.
அடுத்து
அரும்பொருள் யாதொன்றும் இல்’
இதன் பொருள்
முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

அதாவது
தான்னோடு சேர்ந்தவர்களிடம் ஆலோசித்துச் செய்யும் செயலை ஆராய்ந்து திட்டமிட்டு செய்வோர்க்கு0 முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

தெரிந்து செயல்வகை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.

  • மூன்றாவது குறள்.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்”
.
இதில்
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை’
இதன் பொருள்
பின் வரும் ஊதியித்தைக் கருதி கையில் இருக்கும் முதலை இழப்பதற்குக் காரணமான செயலை.
அடுத்து
ஊக்கார் அறிவுடை யார்
இதன் பொருள்
அறிவுடையோர் செய்யமாட்டார்.

அதாவது
பின் வரும் ஊதியித்தைக் கருதி கையில் இருக்கும் முதலை இழப்பதற்குக் காரணமான செயலை அறிவுடையோர் செய்யமாட்டார்.

தெரிந்து செயல்வகை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.

  • நான்காவது குறள்.

தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்”.

இதில்
தெளிவு இலதனைத் தொடங்கார்’
இதன் பொருள்
ஆராயந்து தெளிவில்லாத செயலில் இறங்கமாட்டார்கள்.
அடுத்து
இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்
இதன் பொருள்
தனக்கு இழிவு ஏற்படும் குற்றத்திற்கு அஞ்சுபவர்கள்.

அதாவது
தனக்கு இழிவு ஏற்படும் குற்றத்திற்கு அஞ்சுபவர்கள் ஆராயந்து தெளிவில்லாத செயலில் இறங்கமாட்டார்கள்.

தெரிந்து செயல்வகை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.

  • ஐந்தாவது குறள்.

வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு”
.
இதில்
வகையறச் சூழாது எழுதல்’
இதன் பொருள்
செயலின் வகைகளை எண்ணாமல் திட்டமிடாமல் செயலைத் தொடங்குவது.
அடுத்து
பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு’
இதன் பொருள்
பகைவரை வளரும் நிலத்தில் நிலைபெறச் செய்யும் வழியாகும்.

அதாவது
செயலின் வகைகளை எண்ணாமல் திட்டமிடாமல் செயலைத் தொடங்குவது பகைவரை வளரும் நிலத்தில் நிலைபெறச் செய்யும் வழியாகும்.

தெரிந்து செயல்வகை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.

இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நன்றி! வணக்கம்!

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags