தெரிந்துசெயல்வகை – 2

போன பகுதியில் திருக்குறளின் 47வது அதிகாரமான தெரிந்து செயல்வகையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பாரத்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம்.

தெரிந்து செயல்வகை என்றால் செய்யப் போகும் செயல்களை ஆராய்ந்து செய்யும் திறனைக் குறிப்பதாகும். செய்யும் செயல் சிறியதோ அல்லது பெரியதோ அதைத் திட்டமிட்டு ஆராய்ச்சி செய்தபின் முயற்சிக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

தெரிந்துசெயல்வகை – 2

  • ஆறாவது குறள்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்”.

இதில்
செய்தக்க அல்ல செயக்கெடும்
இதன் பொருள்
செய்யக்கூடாத செய்லகளை ஒருவன் செய்வதால் கெடுவான்.
அடுத்து
செய்தக்க செய்யாமை யானுங் கெடும்’
இதன் பொருள்
செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் தவிர்த்தாலும் கெடுவான்.

அதாவது
செய்யக்கூடாத செய்லகளை ஒருவன் செய்வதால் கெடுவான். செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் தவிர்த்தாலும் கெடுவான்.

தெரிந்து செயல்வகை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.

  • ஏழாவது குறள்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
“.
இதில்
எண்ணித் துணிக கருமம்’
இதன் பொருள்
ஒரு செயலைச் செய்து முடிக்கும் திறனை நன்கு சிந்தித்து தொடங்க வேண்டும்.
அடுத்து
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
இதன் பொருள்
செயலைத் தொடங்கிய பின் சிந்தித்துப் பார்ப்பது என்பது குற்றமாகும்.

அதாவது
ஒரு செயலைச் செய்து முடிக்கும் திறனை நன்கு சிந்தித்து தொடங்க வேண்டும். செயலைத் தொடங்கிய பின் சிந்தித்துப் பார்ப்பது என்பது குற்றமாகும்.

தெரிந்து செயல்வகை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.

  • எட்டாவது குறள்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்”
.
இதில்
ஆற்றின் வருந்தா வருத்தம்
இதன் பொருள்
ஒரு செயலைத் தக்க வழி தெரியாது தொடங்கினால்.
அடுத்து
பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்
இதன் பொருள்
பலர் துணையாக நின்று காப்பாற்றினாலும் குற்றம் உடையதே ஆகும்.

அதாவது
ஒரு செயலைத் தக்க வழி தெரியாது தொடங்கினால் பலர் துணையாக நின்று காப்பாற்றினாலும் குற்றம் உடையதே ஆகும்.

தெரிந்து செயல்வகை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.

  • ஒன்பதாவது குறள்.

நன்றாற்ற லுள்ளும் தவுறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை”
.
இதில்
நன்றாற்ற லுள்ளும் தவுறுண்டு’
இதன் பொருள்
பிறர்க்கு நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
அடுத்து
அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை
இதன் பொருள்
அவரவர் குணங்களை ஆராய்ந்து அதற்கேற்ப செய்யாமல் போனால்.

அதாவது
அவரவர் குணங்களை ஆராய்ந்து அதற்கேற்ப செய்யாமல் போனால் பிறர்க்கு நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

தெரிந்து செயல்வகை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.

  • பத்தாவது குறள்.

எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு”
.
இதில்
எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும்
இதன் பொருள்
அதனால் உலகம் இகழாத செயல்களைச் செய்ய வேண்டும்.
அடுத்து
தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு’
இதன் பொருள்
தம் நிலைமைக்குப் பொருந்தாத செயல்களைச் செய்தால் உலகம் ஏற்காது.

அதாவது
தம் நிலைமைக்குப் பொருந்தாத செயல்களைச் செய்தால் உலகம் ஏற்காது. அதனால் உலகம் இகழாத செயல்களைச் செய்ய வேண்டும்.

தெரிந்து செயல்வகை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள்.

இந்தக் குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்த பகுதியில் இடம்பெறும் அதிகாரம் வலியறிதல்.

நன்றி! வணக்கம்!

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags
Recent posts