காலமறிதல் – 1

இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 49வது அதிகாரமான காலமறிதல். எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் அதை எந்தப் பருவத்தில் செய்ய வேண்டும், எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த இடத்தில் செய்தால் நல்லது என்பதை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்லிறது.

காலமறிதல் – 1

  • முதல் குறள்.

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும்பொழுது.”

இதில்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை
இதன் பொருள்
தன்னைவிட வலிமையான கோட்டானைக் காகம் பகலில் வென்றுவிடும்.
அடுத்து
‘இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும்பொழுது’
இதன் பொருள்
அதுபோலப் பகைவரை வெல்லக் கருதும் அரசன் அதைக் காலமறிந்து வெல்ல வேண்டும்.

அதாவது
தன்னைவிட வலிமையான கோட்டானைக் காகம் பகலில் வென்றுவிடும். அதுபோலப் பகைவரை வெல்லக் கருதும் அரசன் அதைக் காலமறிந்து வெல்ல வேண்டும்.

காலமறிதல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.

  • இரண்டாவது குறள்.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.

இதில்
பருவத்தோடு ஒட்ட ஒழுகல்
இதன் பொருள்
காலத்தோடு பொறுந்துமாறு நடந்து கொள்ள வேண்டும்.
அடுத்து
திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு’
இதன் பொருள்
அவ்வாறு நடந்து கொள்வது தன்னிடம் உள்ள செல்வத்தை நீங்காமல் கட்டும் கயிறாகும்.

அதாவது
காலத்தோடு பொறுந்துமாறு நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது தன்னிடம் உள்ள செல்வத்தை நீங்காமல் கட்டும் கயிறாகும்.

காலமறிதல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.

  • மூன்றாவது குறள்.

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.

இதில்
அருவினை யென்ப உளவோ’
இதன் பொருள்
செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டோ?
அடுத்து
கருவியான் காலம் அறிந்து செயின்
இதன் பொருள்
செயல்களை முடிப்பதற்கு ஏற்றக் கருவிகளுடன் காலமறிந்து செய்தால்.

அதாவது
செயல்களை முடிப்பதற்கு ஏற்றக் கருவிகளுடன் காலமறிந்து செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டோ?

காலமறிதல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.

  • நான்காவது குறள்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.”

இதில்
ஞாலம் கருதினும் கைகூடும்
இதன் பொருள்
உலகமே வேண்டும் என்று நினைத்தாலும் அது கைகூடும்.
அடுத்து
காலம் கருதி இடத்தாற் செயின்
இதன் பொருள்
உரிய காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால்.

அதாவது
உரிய காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால் உலகமே வேண்டும் என்று நினைத்தாலும் அது கைகூடும்.

காலமறிதல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.

  • ஐந்தாவது குறள்.

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.”

இதில்
காலம் கருதி இருப்பர்’
இதன் பொருள்
ஏற்றக் காலத்தைக் கருத்தில் கொண்டு காத்திருப்பர்.
அடுத்து
கலங்காது ஞாலம் கருது பவர்
இதன் பொருள்
இந்தப் பூவுலகத்தை வெல்ல நினைப்போர்.

அதாவது
இந்தப் பூவுலகத்தை வெல்ல நினைப்போர் ஏற்றக் காலத்தைக் கருத்தில் கொண்டு காத்திருப்பர்.

காலமறிதல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.

இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நன்றி! வணக்கம்!

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags
Recent posts