வலியறிதல் – 2

திருக்குறளின் வலியறிதல் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பாரத்தோம். வலியறிதல் அதிகாரத்தன் ஆறிலருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.

வலியறிதல் என்றால் ஒரு செயலைச் செய்வதற்கான அடிப்படை திறன் அல்லது ஆற்றலைக் குறிக்கும். எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன் அதைச் செய்வதற்கான திறமை, பலம் மற்றும் எதிரியின் பலம் இது போன்றவற்றை ஆராய்ந்த பின் தொடங்க வேண்டும். ஒரு செயலைத் தொடங்க வேண்டிய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது.

வலியறிதல் – 2

  • ஆறாவது குறள்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.”

இதில்
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
இதன் பொருள்
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர் அதையும் தாண்டி மேலே ஏற முயன்றால்.
அடுத்து
உயிர்க்கிறுதி ஆகி விடும்’
இதன் பொருள்
அந்த முயற்சியே அவர் உயிர்க்கு முடிவாகிவிடும்.

அதாவது
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர் அதையும் தாண்டி மேலே ஏற முயன்றால் அந்த முயற்சியே அவர் உயிர்க்கு முடிவாகிவிடும்.

வலியறிதல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.

  • ஏழாவது குறள்

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி
.”
இதில்
ஆற்றின் அறவறிந்து ஈக’
இதன் பொருள்
தம்மிடம் உள்ள பொருளின் அளவறிந்து பிறர்க்கு கொடுக்க வேண்டும்.
அடுத்து
அதுபொருள் போற்றி வழங்கு நெறி
இதன் பொருள்
அப்படி அளவறித்து கொடுப்பதேப் பொருளைப் பேணிக் காக்கும் வழியாகும்.

அதாவது
தம்மிடம் உள்ள பொருளின் அளவறிந்து பிறர்க்கு கொடுக்க வேண்டும். அப்படி அளவறித்து கொடுப்பதேப் பொருளைப் பேணிக் காக்கும் வழியாகும்.

வலியறிதல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.

  • எட்டாவது குறள்.

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.”

இதில்
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை’
இதன் பொருள்
வரும் வருவாய் சிறியதாயினும் கேடில்லை.
அடுத்து
போகாறு அகலாக் கடை
இதன் பொருள்
செலவு வருவாயைவிடப் பெரிதாகாதபோது.

அதாவது
செலவு வருவாயைவிடப் பெரிதாகாதபோது வரும் வருவாய் சிறியதாயினும் கேடில்லை.

வலியறிதல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.

  • ஒன்பதாவது குறள்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
.’
இதில்
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை
இதன் பொருள்
தன்னுடைய பொருளின் அளவறிந்து அதற்கேற்ப வாழாதவனின் வாழ்க்கை.
அடுத்து
உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்’
இதன் பொருள்
உள்ளது போலத் தோன்றி பின் இல்லாமால் அழிந்து விடும்.

அதாவது
தன்னுடைய பொருளின் அளவறிந்து அதற்கேற்ப வாழாதவனின் வாழ்க்கை உள்ளது போலத் தோன்றி பின் இல்லாமால் அழிந்து விடும்.

வலியறிதல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.

  • பத்தாவது குறள்.

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்
.”
இதில்
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை’
இதன் பொருள்
தனக்குள்ள பொருளின் அளவை ஆராயாமல் பிறர்க்கு செய்யும் உபகாரத்தால்
அடுத்து
வளவரை வல்லைக் கெடும்’
இதன் பொருள்
ஒருவனுடைய செல்வத்தின் அளவு குறைந்து போகும்.

அதாவது
தனக்குள்ள பொருளின் அளவை ஆராயாமல் பிறர்க்கு செய்யும் உபகாரத்தால் ஒருவனுடைய செல்வத்தின் அளவைக் குறைத்து விடும்.

வலியறிதல் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.

இந்தக் குறளோடு அந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்த பகுதியில் இடம் பெறும் அதிகாரம் காலமறிதல்.

நன்றி! வணக்கம்!

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags