போன பகுதியில் திருக்குறளின் சிற்றினஞ்சேராமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பாரத்தோம். இதில் சிற்றினம் இதன் பொருள் நல்ல குணங்கள் இல்லாமல் தீய வழக்கங்கள் உடையவர்களைக் குறிக்கும். நாம் யாரிடம் நட்பாக இருக்கிறோமோ அவரின் குணநலன்கள் நம்முடைய எண்ணங்களைப் பாதிக்கும். சிலரின் நட்பு துன்பங்களைத் தரும். இந்த அதிகாரம் தீய குணங்களை உடைய சிற்றின மக்களுடன் சேராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
சிற்றினஞ்சேராமை – 2
- ஆறாவது குறள்.
“மனந்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை“.
இதில்
‘மனந்தூயார்க்கு எச்சம்நன் றாகும்‘
இதன் விளக்கம்
மனம் தூய்மையானவர்களுக்கு அவர்களுக்குப் பின் நிற்கும் புகழ் முதலானவை சிறப்பாக அமையும்.
அடுத்து
‘இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை‘
இதன் விளக்கம்
சேர்ந்த இனம் தூய்மையாக உள்ளவர்களுக்கு நன்மையாகாத செயல் எதுவும் இல்லை.
அதாவது
மனம் தூய்மையானவர்களுக்கு அவர்களுக்குப் பின் நிற்கும் புகழ் முதலானவை சிறப்பாக அமையும். சேர்ந்த இனம் தூய்மையாக உள்ளவர்களுக்கு நன்மையாகாத செயல் எதுவும் இல்லை.
சிற்றினஞ்சேராமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
ஏழாவது குறள்.
“மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்”.
இதில்
‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்‘
இதன் விளக்கம்
மனிதர்களுக்கு மனநலம் செல்வத்தினைத் தரும்.
அடுத்து
‘இனநலம் எல்லாப் புகழும் தரும்’
இதன் விளக்கம்
நன்றாக இருக்கும் இனமோ எல்லாப் புகழையும் தரும்.
அதாவது
மனிதர்களுக்கு மனநலம் செல்வத்தினைத் தரும். நன்றாக இருக்கும் இனமோ எல்லாப் புகழையும் தரும்.
சிற்றினஞ்சேராமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து”.
இதில்
‘மனநலம் நன்குடைய ராயினும்’
இதன் விளக்கம்
மனநலம் நன்றாக இருப்பவரே ஆயினும்.
அடுத்து
‘சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து’
இதன் விளக்கம்
நிறைகுணம் பெற்ற பெரியோர்களுக்கு அவர் சார்ந்த இனத்தின் நன்மை காவலாக அமையும்.
அதாவது
மனநலம் நன்றாக இருப்பவரே ஆயினும் நிறைகுணம் பெற்ற பெரியோர்களுக்கு அவர் சார்ந்த இனத்தின் நன்மை காவலாக அமையும்.
சிற்றினஞ்சேராமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து“.
இதில்
‘மனநலத்தின் ஆகும் மறுமை’
இதன் விளக்கம்
ஒருவனுக்கு மனம் நன்றாக இருந்தால் மறுமையில் இன்பம் உண்டாகும்.
அடுத்து
‘மற்றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து‘
இதன் விளக்கம்.
அதுவும் இனம் நன்றாக இருந்தால் மேலும் சிறப்புடையதாக இருக்கும்.
அதாவது
ஒருவனுக்கு மனம் நன்றாக இருந்தால் மறுமையில் இன்பம் உண்டாகும். அதுவும் இனம் நன்றாக இருந்தால் மேலும் சிறப்புடையதாக இருக்கும்.
சிற்றினஞ்சேராமை அதிகாரத்தின் ஒன்பாதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்.”
இதில்
‘நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை’
இதன் விளக்கம்
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் சிறந்த துணை இல்லை.
அடுத்து
‘தீயினத்தின் அல்லல் படுப்பதூஉம் இல்’
இதன் விளக்கம்
தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரும் பகையும் இல்லை.
அதாவது
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் சிறந்த துணை இல்லை.
தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரும் பகையும் இல்லை.
சிற்றினஞ்சேராமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் தெரிந்து செயல்வகை.
நன்றி! வணக்கம்!



