காலமறிதல் – 2

முந்தைய பகுதியில் திருக்குறளின் 49வது அதிகாரமான காலமறிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பாரத்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கலாம்.

எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் அதை எந்தப் பருவத்தில் செய்ய வேண்டும், எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டும், எந்த இடத்தில் செய்தால் நல்லது என்பதை ஆராய்ந்து செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்லிறது.

காலமறிதல் – 2

  • ஆறாவது குறள்.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து”
.
இதில்
ஊக்க முடையான் ஒடுக்கம்’
இதன் பொருள்
உகந்த காலத்தை எதிர்பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது.
அடுத்து
பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து’
இதன் பொருள்
ஆட்டுக்கிடா தன் பகையைத் தாக்குவதற்கு பின்வாங்குவது போன்றது.

அதாவது
காலத்தை எதிர்பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது
ஆட்டுக்கிடா தன் பகையைத் தாக்குவதற்கு பின்வாங்குவது போன்றது.

காலமறிதல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.

  • ஏழாவது குறள்

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

இதில்
பொள்ளென ஆங்கே புறம்வேரார்’
இதன் பொருள்
எதிரிகள் தீங்கு செய்யும்போது உடனே சினம் கொண்டு வெளியே காட்ட மாட்டார்.
அடுத்து
காலம்பார்த்து உள்வேர்ப்பர்
இதன் பொருள்
வெல்வதற்கு ஏற்றக் காலம் பார்த்துச் சினம் கொள்வர்.
அடுத்து
ஒள்ளி யவர்.
இதன் பொருள்
அறிவுடையவர்.

அதாவது
அறிவுடையவர் எதிரிகள் தீங்கு செய்யும்போது உடனே சினம் கொண்டு வெளியே காட்ட மாட்டார். வெல்வதற்கு ஏற்றக் காலம் பார்த்துச் சினம் கொள்வர்.

காலமறிதல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.

  • எட்டாவது குறள்.

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.”

இதில்
செறுநரைக் காணின் சுமக்க’
இதன் பொருள்
பகைவருக்கு இறுதி காலம் வரும் வரை அவரைக் கண்டால் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து
இறுவரை காணின் கிழக்காம் தலை’
இதன் பொருள்
பகைவருக்கு முடிவுக் காலம் வரும்போது அவரது தலை கீழே விழும்.

அதாவது
பகைவருக்கு இறுதி காலம் வரும் வரை அவரைக் கண்டால் பொறுத்துக் கொள்ள வேண்டும். பகைவருக்கு முடிவு காலம் வரும்போது அவரது தலை கீழே விழும்.

காலமறிதல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.

  • ஒன்பதாவது குறள்.

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

இதில்
எய்தற் கரியது இயைந்தக்கால்’
இதன் பொருள்
அடைவதற்கு அரிய காலம் வந்து விட்டால்.
அடுத்து
அந்நிலையே செய்தற் கரிய செயல்
இதன் பொருள்
அப்பொழுதே அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரிய செயல்களைச் செய்ய வேண்டும்.

அதாவது
அடைவதற்கு அரிய காலம் வந்து விட்டால் அப்பொழுதே அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரிய செயல்களைச் செய்ய வேண்டும்.

காலமறிதல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.

  • பத்தாவது குறள்.

“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.”
இதில்
கொக்கொக்க கூம்பும் பருவத்து
இதன் பொருள்
பொறுத்தருக்கும் சமயத்தில் கொக்குபோலப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.
அடுத்து
மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து’
இதன் பொருள்
செய்வதற்கு வாய்த்த காலம் வந்தவுடன் கொக்கு தன் இறையைக் குத்திப் பிடிப்பது போலத் தவறின்றி செய்து முடிக்க வேண்டும்.

அதாவது
பொறுத்தருக்கும் சமயத்தில் கொக்குபோலப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். செய்வதற்கு வாய்த்த காலம் வந்தவுடன் கொக்கு தன் இறையைக் குத்திப் பிடிப்பது போலத் தவறின்றி செய்து முடிக்க வேண்டும்.

காலமறிதல் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.

இந்தக் குறளோடு இந்த்ப் பகுதி முடிவடைந்தது. அடுத்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் இடனறிதல்.

நன்றி! வணக்கம்!

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags
Recent posts