இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப் போவது திருக்குறளின் 46வது அதிகாரமான சிற்றினஞ்சேராமை. இதில் சிற்றினம் இதன் பொருள் நல்ல குணங்கள் இல்லாமல் தீய வழக்கங்கள் உடையவர்களைக் குறிக்கும்.
நாம் யாரிடம் நட்பாக இருக்கிறோமோ அவரின் குணநலன்கள் நம்முடைய எண்ணங்களைப் பாதிக்கும். தீயவர்களுடைய நட்பு துன்பங்களைத் தரும். இந்த அதிகாரம் தீய குணங்களை உடைய சிற்றின மக்களுடன் சேராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
சிற்றினஞ்சேராமை – 1
- முதல் குறள்.
“சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்”.
இதில்
‘சிற்றினம் அஞ்சும் பெருமை’
இதன் பொருள்
பெரியோருடைய இயல்பு தீய குணங்களை உடைய சிற்றினத்தைக் கண்டால் அஞ்சி ஒதுங்குவதாகும்.
அடுத்து
‘சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்’
இதன் பொருள்
சிறியோர் இயல்பு அதையே உறவாக எண்ணி அணைத்துக் கொள்ளும்.
அதாவது
பெரியோருடைய இயல்பு தீய குணங்களை உடைய சிற்றினத்தைக் கண்டால் அஞ்சி ஒதுங்குவதாகும். சிறியோர் இயல்பு அதையே உறவாக எண்ணி அணைத்துக் கொள்ளும்.
சிற்றினஞ்சேராமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு”.
இதில்
‘நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும்’
இதன் பொருள்
நீரானது தன் தன்மையை இழந்து தான் சேரந்த நிலத்தின் தன்மையைப் பெறும்.
அடுத்து
‘மாந்தர்க்கு இனத்தியல்பது ஆகும் அறிவு’
இதன் பொருள்
அதுபோல மனிதரும் அவர் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெறுவர்.
அதாவது
நீரானது தன் தன்மையை இழந்து தான் சேரந்த நிலத்தின் தன்மையைப் பெறும். அதுபோல மனிதரும் அவர் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெறுவர்.
சிற்றினஞ்சேராமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்”.
இதில்
‘மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி’
இதன் பொருள்
மக்களுக்கு இயற்கை உணர்வு அவர்களுடைய மனத்தால் உண்டாகும்.
அடுத்து
‘இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல்’
இதன் பொருள்
ஆனால் ஒருவன் இத்தகையவன் என்று பெரியோர்களால் சொல்லப்படும் சொல் அவன் சார்ந்த இனத்தினால் ஏற்படும்.
அதாவது
மக்களுக்கு இயற்கை உணர்வு அவர்களுடைய மனத்தால் உண்டாகும். ஆனால் ஒருவன் இத்தகையவன் என்று பெரியோர்களால் சொல்லப்படும் சொல் அவன் சார்ந்த இனத்தினால் ஏற்படும்.
சிற்றினஞ்சேராமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு”.
இதில்
‘மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு’
இதன் பொருள்
ஒருவனுடைய அறிவு அவன் மனதில் உள்ளது போலத் தோன்றும்.
அடுத்து
‘இனத்துள தாகும் அறிவு’
இதன் பொருள்
உண்மையில் அந்த அறிவு அவன் சேரந்த இனத்தால் அமைவதாகும்.
அதாவது
ஒருவனுடைய அறிவு அவன் மனதில் உள்ளது போலத் தோன்றும். உண்மையில் அந்த அறிவு அவன் சேரந்த இனத்தால் அமைவதாகும்.
சிற்றினஞ்சேராமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்”.
இதில்
‘மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்’
இதன் பொருள்
மனத்தூய்மை, செய்யும் தொழிலில் தூய்மை ஆகிய இரண்டும்.
அடுத்து
‘இனந்தூய்மை தூவா வரும்’
இதன் பொருள்
அவன் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்து அமையும்.
அதாவது
மனத்தூய்மை, செய்யும் தொழிலில் தூய்மை ஆகிய இரண்டும் அவன் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்து அமையும்.
சிற்றினஞ்சேராமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பாரப்போம்.
நன்றி! வணக்கம்!



