திருக்குறளின் 42வது அதிகாரமான கேள்வியிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கப்போகிறோம். கேள்வி என்பதற்குப் பொருள் நாம் அறியாத ஒன்றைத் தெரிந்து கொள்வது, செவி வழியாகக் கற்றறிந்தவரிடம் கேட்டு அறிந்து கொள்வது என்று சொல்லலாம். பல நூல்களைக் கற்று அறிவது போல் செவி வழியாகக் கேட்டும் அறிந்து கொள்ளலாம்.

கேள்வி -1

  • முதல் குறள்.

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
.”
இதில்
‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’
இதன் பொருள்
ஒருவருக்கு சிறப்புடைய செல்வமானது செவியால் வரும் செல்வம்.
அடுத்து
‘அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’
இதன் பொருள்
அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானது ஆகும்.

அதாவது
ஒருவருக்கு சிறப்புடைய செல்வமானது செவியால் வரும் செல்வம். அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானது ஆகும்.

கேள்வி அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது. 

  • இரண்டாவது குறள்.

“செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
.”
இதில்
‘செவுக்குண வில்லாத போழ்து’
செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது.
அடுத்து
‘சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்’
இதன் பொருள்
வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

அதாவது
செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

கேள்வி அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.

  • மூன்றாவது குறள்.

“செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து
.”
இதில்
‘செவியுணவிற் கேள்வி யுடையார்’
இதன் பொருள்
செவிக்கு உணவாகிய கேள்வியை உடையவர்.
அடுத்து
‘அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து’
இதன் பொருள்
பூமியில் வாழ்பவர்களாக இருந்தாலும் வேள்வித் தீயில் கொடுக்கப்படும் உணவைப் பெறும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.

அதாவது
செவிக்கு உணவாகிய கேள்வியை உடையவர் பூமியில் வாழ்பவர்களாக இருந்தாலும் வேள்வித் தீயில் கொடுக்கப்படும் உணவைப் பெறும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.

கேள்வி அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.

  • நான்காவது குறள்.

“கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை
.”
இதில்
‘கற்றிலன் ஆயினும் கேட்க‘
இதன் பொருள்
ஒருவன் நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றறிந்தவர் சொல்லக் கேட்க வேண்டும்.
அடுத்து
‘அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை‘
இதன் பொருள்
அது வாழ்வில் தளர்ச்சி வரும்போது ஊன்றுகோல் போல் துணையாக உதவும்.

அதாவது
ஒருவன் நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றறிந்தவர் சொல்லக் கேட்க வேண்டும். அது வாழ்வில் தளர்ச்சி வரும்போது ஊன்றுகோல் போல் துணையாக உதவும்.

கேள்வி அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.

  • ஐந்தாவது குறள்.

“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.”

இதில்
‘இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே’
இதன் பொருள்
வழுக்கும் சேற்று நிலத்தில் நடந்து போகும்போது உதவும் ஊன்றுகோல் போல.
அடுத்து
‘ஒழுக்க முடையார்வாய்ச் சொல்’
இதன் பொருள்
ஒழுக்கம் உடையோரின் வாய்ச் சொற்கள் துன்ப நேரத்தில் துணையாக நின்று உதவும்.

அதாவது
வழுக்கும் சேற்று நிலத்தில் நடந்து போகும்போது உதவும் ஊன்றுகோல் போல ஒழுக்கம் உடையோரின் வாய்ச் சொற்கள் துன்ப நேரத்தில் துணையாக நின்று உதவும்.

கேள்வி அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.

இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. கேள்வி அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

நன்றி! வணக்கம்!







 
 
 
 
 

Share with Friends

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Categories
Tags