திருக்குறளின் 54வது அதிகாரமான பொச்சாவாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை போன பகுதியில்பாரத்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில்பாரக்கலாம்.
பொச்சாப்பு என்றால் மறதியைக் குறிக்கும். பொச்சாவாமை என்றால் எதிலும் மறதி இல்லாமல் விழிப்புடன் இருப்பதைக் குறிக்கும். மறதியால் கடமையைச் செய்யாமல் அலட்சியமாக இருப்பது புகழை அழித்துவிடும். எந்தச் சூழ்நிலையிலும் சோர்வு இல்லாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும். செல்வம், பதவி, அதிகாரம் இவைகள் மனிதனுக்கு செருக்கைக் கொடுக்கும். இன்பம், துன்பம் எதிலும் சமநிலையோடு செயல்பட வேண்டும். அதிக உணர்ச்சிப் பெருக்கால் ஏற்படும் மனச்சோர்வு, அதிக கோபத்தைவிட துன்பத்தைத் தரும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
பொச்சாவாமை – 2
- ஆறாவது குறள்.
“இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.”
இதில்
‘இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின்‘
இதன் விளக்கம்
எவரிடத்திலும் எப்பொழுதும் மறவாமைக்குணம் விடாமல் இருக்கும் என்றால்.
அடுத்து
‘அதுவொப்பது இல்‘
இதன் விளக்கம்
அதற்கு இணையான நன்மை வேறு எதுவும் இல்லை.
அதாவது
எவரிடத்திலும் எப்பொழுதும் மறவாமைக்குணம் விடாமல் இருக்கும் என்றால், அதற்கு இணையான நன்மை வேறு எதுவும் இல்லை.
பொச்சாவாமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.”
இதில்
‘அரியஎன்று ஆகாத இல்லை‘
இதன் விளக்கம்
செய்வதற்கு அரியவை என்று சொல்ல முடியாதது எதுவும் இல்லை.
அடுத்து
‘பொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்‘
இதன் விளக்கம்
மறவாமை என்ன கருவியால் கடமைகளை எண்ணிச் செய்தால்.
அதாவது
மறவாமை என்ன கருவியால் கடமைகளை எண்ணிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று சொல்ல முடியாதது எதுவும் இல்லை.
பொச்சாவாமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.”
இதில்
‘புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்’
இதன் விளக்கம்
சான்றோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும்.
அடுத்து
‘செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்‘
இதன் விளக்கம்
அப்படி கடைப்பிடிக்க மறந்தவர்களுக்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.
அதாவது
சான்றோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி கடைப்பிடிக்க மறந்தவர்களுக்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.
பொச்சாவாமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.“
இதில்
‘இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக’
இதன் விளக்கம்
முற்காலத்தில் அப்படிப்பட்ட குணத்தினால் உண்டான மறதியால் அழிந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அடுத்து
‘தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து’
இதன் விளக்கம்
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்கு கொண்டு மகிழ்ந்திருக்கும்போது.
அதாவது
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்கு கொண்டு மகிழ்ந்திருக்கும்போது முற்காலத்தில் அப்படிப்பட்ட குணத்தினால் உண்டான மறதியால் அழிந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
பொச்சாவாமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.”
இதில்
‘உள்ளியது எய்தல் எளிதுமன்’
இதன் விளக்கம்
ஒருவன் அடையக் கருதியதை அடைவது எளிதாகும்.
அடுத்து
‘மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்’
இதன் விளக்கம்
எண்ணியதை விடாமல் நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால்.
அதாவது
எண்ணியதை விடாமல் நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால், ஒருவன் அடையக் கருதியதை அடைவது எளிதாகும்.
பொச்சாவாமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது. இந்தக் குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் செங்கோன்மை.
நன்றி! வணக்கம்!



