ஹிதோபதேசக் கதை
ஹிதோபதேச கதைகள் தொடரில் போன பகுதியில் சித்ரக்ரீவா சொன்ன புலியிடம் ஏமாந்த பயணியின் கதையைக் கேட்டிருப்பீர்கள். அந்த கதையைச் சொல்லி சித்ரக்ரீவா புறாக்களைப் பேராசை ஆபத்தில் முடியுமென்று எச்சரித்தும், சித்ரக்ரீவா சொன்னதைக் கேட்காமல் அங்க கீழ் இருந்த தனியங்களைச் சாப்பிடப் போய் அந்த வலையில் மாட்டிக்கொண்டார்கள். சித்ரக்ரீவாவும் அது மட்டும் பறந்துபோகாமல் மீதி புறாக்களுடன் போய் அந்த வலையில் அவர்களோடு அதுவும் மாட்டிக்கொண்டது.. அதற்கப்புறம் சித்ரக்ரீவா ஒற்றுமையா இருந்தால் எவ்வளவு நன்மைகள் இருக்கும் என்று சொல்லி, எப்படி அந்த வலையில் இருந்து எல்லாரும் தப்பிக்க வழி சொல்லுகிறது என்று இந்தக் கதையில் பார்க்கலாம்.
ஒற்றுமையே பலம்
அந்த வலையில் எல்லாப் புறாக்களும் மாட்டிக்கொண்டதும் பயத்தில் எல்லாம் கீச் கீச்னு கத்த ஆரம்பித்தன. எல்லாப் புறாக்களும் எப்படியாவது அந்த வலையிலிருந்து வெளியில் வரனும் என்று முட்டி மோதி பார்த்தன. ம்ஹும்! ஒன்றும் முடியவில்லை! ஒரு பக்கம் பயம். இன்னொரு பக்கம் கோபத்தில் கத்தல். எல்லா புறாக்களும் சேந்து சித்ரக்ரீவாவோட விவாதம் பண்ணின புறாவைப் பார்த்து “எல்லாம் உன்னால்தான். உன் பேச்சைக் கேட்டு நாங்களும் வந்து மாட்டிக்கொண்டோம். நீ சொன்னதை நாங்கள் கேட்டிருக்கக்கூடாது.உன்னுடைய பேச்சில் ஏமாந்ததால் என்ன ஆயிற்று பார்! நாளைக்கு உயிரோடு இருப்போமோ என்னவோ? அந்த வேடன் எல்லாரையும் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்விடுவான். வித்தாலும் வித்திடுவான். யாருக்குச் சாப்பாடா போகப்போகிறோமோ தெரியாது!” பயத்திலும் கோபத்திலும் புறாக்கள் புலம்பத் தொடங்கின.
எந்த வெற்றியிலும் பங்கு போட நிறைய பேர் வருவார்கள். ஆனால் தோத்துட்டோமோ யாருமே பகிர்ந்து கொள்ள வரமாட்டார்கள். விவாதம் பண்ணின புறா சொன்னதை மீதிப் புறாக்கள் ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காதே! அது சொன்னதை ஒத்துக்கிட்டு இப்போது அதையே பழியும் சொல்கின்றன. இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சீத்ரக்ரீவா “சும்மா அந்தப் புறாவையே குத்தம் சொல்லாதீர்கள். இந்தப் பிரச்சனையில் நாம் எல்லாரும் சேந்துதான் இருக்கிறோம். நமக்குள் சண்டை போட்டால் தீர்வு கிடைக்காது. பழியை அந்தப் புறாமேல் போடுவதை நிறுத்திவிட்டு இந்த வலையிலிருந்து எப்படி வெளியில் வருவதென்று யோசிக்கவேண்டும்,” எல்லாப் புறாக்களையும் பார்த்து அறிவுரை சொன்னது.
சித்ரக்ரீவா ஒரு நல்ல தலைவன். அதனால்தான் அந்த புறா செய்த தப்பையும் மன்னித்து எல்லாரையும் எப்படி காப்பதனும்னு யோசித்தது. வாழ்க்கையில் எல்லாம் சரியா நடக்கும்போது நன்றாகத்தான் இருக்கும். வாழக்கையில் பிரச்சனைகள் வரும்போதுதான் ஒருவருடைய பலம், பலவீனம் இரண்டுமே தெரியும். “இந்த வலையிலிருந்து உயிரோடு வெளியில் வருவதுதான் நம் குறிக்கோள். சண்டை போடுவது, பழி சொல்வது இதையெல்லாம் நிறுத்திட்டு என்ன பண்ணமுடியுமென்றுதான் இப்போது பார்க்கவேண்டும். என்னுடைய திட்டம் என்ன என்று சொல்லப்போகிறேன். கவனமா கேளுங்கள். நான் உங்களுக்குச் சைகை செய்யும்போது ஒரே சமயத்தில் எல்லாரும் சேந்து சிறகடித்துக்கொண்டு மேலே பறக்க ஆரம்பிக்கவேண்டும். மறந்துடாதீங்க! ஒரே சமயத்தில் எல்லாரும் சேர்ந்து பறக்கவேண்டும். ஒற்றுமை தான் பலம். ஒரு புறா சரியா செய்யவில்லை என்றாலும் மீதி புறாக்களுக்குத்தான் வேலை அதிகமா இருக்கும். ஒவ்வொரு புறாவும் தனியா இந்த வேலைய செய்ய முடியாது. பெரிய உருவம் கொண்ட யானையைக்கூட மனிதர்கள் புல் கயித்தால் காட்டிடுவாங்க. நாம எல்லாரும் சேர்ந்து ஒரே சமயத்தில் பறக்க ஆரம்பித்தால் அந்த வேடனுக்குப் புரியும் முன்பே இந்த வலையோடு நாம் மேலே பறக்க ஆரம்பித்து விடுவோம்” ஒரு புறா விடாமல் எல்லாருக்கும் புரிஞ்சதானு பார்த்துவிட்டு “பார்க்கச் சின்ன சின்ன புறாவா இருக்கலாம். ஒற்றுமையா சேர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்,” மறுபடியும் சித்ரக்ரீவா அழுத்தமா சொன்னது.
இது எதுவுமே தெரியாத அந்த வேடனுக்கு அந்த புறாக்கள் அவனுடைய வலையில் மாட்டிக்கொண்டதைப் பார்த்து சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை. “அப்பா! எத்தனை பறவைகள்! இதை எல்லாம் விற்றா எவ்வளவு பணம் வரும்! இன்றைக்குப் புதையல்தான் கிடைத்திருக்கிறது.” அந்த பணத்தை வைத்து என்னெல்லாம் பண்ணலாம் என்று கனவுகள் கான ஆரம்பித்தான். “பெரிய்யய்ய வீடு வாங்கலாமா? மனைவிக்கு நகைகள் வாங்கலாமா?” இப்படி எல்லாம் கற்பனைகள் செஞ்சிட்டிருக்கும் போது, ஒரு பெரிய சத்தம் அவனை நிஜ உலகத்துக்கு இழுத்தது. அந்த சத்தம் எங்கே இருந்து வருதுனு அவன் திரும்பிப் பார்த்தபோது அவனால் அதை நம்பவே முடியவில்லை.
“என்ன நடக்கிறது இங்க? இது எப்படி நடக்கும்? ஐயோ! என்னுடைய பறவைகள், அந்த வலையோடு மேலே பறக்குதே” கத்திக்கொண்டே அந்த வலையைப் பிடித்து இழுக்க அதைத் தொடர்ந்து ஓடினான். அவனிடம் அகப்படாமல் அந்த புறாக்கள் வேகமா மேலே மேலே பறக்க ஆரம்பித்தன. அவனால் அந்த புறாக்களைப் பிடிக்கவே முடியலை. வேகமா பறந்து அந்த புறாக்கள் ரொம்ப தூரம் வந்தன. அந்த வேடனை விட்டு ரொம்ப தூரம் வாந்தாச்சு என்று தெரிந்து அந்த புறாக்கள் படபடப்பு நீங்கி “சித்ரக்ரீவா! இப்போது நாம் எல்லாம் இந்த வலையிலிருந்து எப்படி வெளியில் வருவது?என்ன பண்ண முடியும் அதுக்கு?” என்று தலைவனைக் கேட்டது. “கண்டகி ஆறு கரையில், என்னுடைய நண்பன் எலிராஜா ஹிரண்யாகா வசிக்கிறான். நாமெல்லாம் அங்க போய் அவனுடைய உதவியைக் கேட்கலாம். அவன் நமக்கு நிச்சயமா உதவுவான்,” சீத்ரக்ரீவா சொல்ல, எல்லா பறவைகளும் ஹிரண்யகா இருக்கிற இடத்துக்குப் போகப் பறக்க ஆரம்பித்தன.
அந்த புறாக்கள் எல்லாம் இறங்கும்போது ஏற்பட்ட சிறகுகளுடைய சத்தத்தைக் கேட்டு “இது என்ன? இப்படி ஒரு சத்த்? என்று பொந்துக்குள் இருந்த ஹிரண்யகாவுக்கு ஒரு குழப்பம். சித்ரக்ரீவா ஹிரண்யாகாவை பெயர் சொல்லி கூப்பேதும் பொந்திலிருந்து எட்டிப் பார்த்த எலி அதன் நண்பன் சித்ரக்ரீவாவப் பார்த்ததும் “ஹே! சித்ரக்ரீவா! நீயா! எப்படி இருக்கே?” என்று கேட்ட போதுதான் எல்லா புறாக்களும் வலையில் மாட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்தது. “அடடா! இது என்ன? எல்லாரும் வரைக்குள்ள மாட்டிக்கிட்டிருக்கீங்? என்னதான் நடந்தது?” கேள்வியைக் கேட்டது.
சித்ரக்ரீவா நடந்ததை எல்லாம் சொல்லி முடித்ததும், “சரி! சித்ரக்ராவா! உன் காலை சுத்தி உள்ள வலையைக் கடித்து உன்னை வெளியில் வரவைக்கிறேன்,” என்று எலிசொன்னதா, அதற்கு சித்ரக்ரீவா ஒத்துக்கலை. “அப்படிப் பண்ண வேண்டாம். இந்த புறாக்களுக்கு நான்தான் தலைவன். எல்லாரும் என்னுடைய பொறுப்பில் இருக்கிறார்கள். முதலில் அவர்களை விடுவிக்கவேண்டும்,” சித்ரக்ரீவா சொன்னபோது ஹிரண்யகா தயங்கிச்சு. “உங்கள் எல்லாரையும் விடுவிக்கும் அளவுக்கு என்கிட்ட பலம் இருக்குமா தெரியலையே? முதலில் உன்ன விடுவிக்கிறேன் அப்புறமா அவர்களைப் பார்த்துக்கொள்ளலாம்” ஹிரண்யகா சொன்னது. சித்ரக்ரீவா அதற்குச் சம்மதிக்கவே இல்லை. “இல்லை ஹிரண்யகா. நான் அவர்களுடைய தலைவன். அவர்களுடைய நலன்தான் முதலில் முக்கியம். இறந்ததுக்கு அப்புறம் உடம்பு இருக்காது. ஆனால் நாம் செய்யும் நல்லது உடம்பு போனதுக்காகப்புறமும் நிலைத்து இருக்கும். அவர்களுடைய பாதுகாப்புதான் எனக்கு முக்கியம். தயவுசெய்து அவர்களை முதலில் காப்பாற்று” .சித்ரக்ரீவா கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னது.
சித்ரக்ரீவாவின் கடமை உணர்வுப் பார்த்து வியந்த எலி “என்ன ஓர் உயர்ந்த உள்ளம் உனக்கு! வேடனுடைய வலையில் மாட்டிக்கொண்டது உங்கள் தப்பில்லை. இந்த மனிதர்களுடைய பேராசையால் நமக்குத்தான் ஆபத்து அதிகம்.” ஹிரண்யகா தன் நண்பனுக்காக மெல்ல மெல்ல அந்த வலையைக் கடித்து அந்தப் புறாக்களை விடுவித்தது. என்ன அதற்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு.
அந்தப் புறாக்கள் ஹிரண்யாகாவுக்கு அவர்களுடைய நன்றியைச் சொல்லிவிட்டு விடுதலை கிடைத்த சந்தோஷத்தில் அவர்களுடைய இடத்துக்குப் போய்விட்டன. இப்படி நடந்தது எல்லாம் காக்கா லகுபட்னகா ஒன்னுவிடாமல் பார்த்தது. நடந்ததை எல்லாம் பார்த்து இப்படியும் ஒரு நட்பா என்று அதனால் நம்பமுடியவில்லை.
“புறாவுக்கும் எலிக்கும் இப்படி ஒரு நட்பா! எலியால்தான் அவர்களுக்கு அந்த வலையிலிருந்து விடுதலைக் கிடைத்தது. எனக்கும் இந்த மாதிரி ஒரு நண்பன் இருந்தால் எப்படி இருக்கும்? ஏன் நானும் இந்த எலியோடு அந்தப் புறா மாதிரி நட்பா இருக்கக்கூடாது”. அந்த எலியிடம் போய் சொல்லலாமென்று அந்த பொந்துக்குப் பக்கத்தில் போய் “எலிராஜா கொஞ்சம் வெளியில் வா. எனக்கும் உன்னுடைய நட்பு வேண்டும்” லகுபட்னகா அந்த எலியைக் கூப்பிட்டது. “என்ன? யார் அது?” எலி கேட்டது.
“நான்தான் காக்கா, லகுபட்னகா. அந்தப் புறாவோடு உன்னுடைய நட்பைப் பார்த்து உன்னை எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.. நீ அந்தப் புறாக்களை அந்த வலையிலிருந்து விடுவித்ததையும் பார்த்தேன். நானும் உன்னுடைய நண்பனாக ஆசைப்படுகிறேன்” அதன் ஆசையைச் சொன்னது. “அதெப்படி முடியும்? ஹிரண்யகா கேட்க “ஏன் முடியாது?” லகுபட்னகா திரும்பிக் கேட்க, எலி கொஞ்சம் கோபமாகவே சொன்னது” நீ கேக்கறது உனக்கு விந்தையா தெரியலை?” “அப்படி ஒன்றும் எனக்குத் தெரியலையே. நான் கேட்டதில் என்ன தப்பு” காக்கா புரியாமல் கேட்டது. “காக்காக்கள் எல்லாம் எலியைச் சாப்பிடுவீர்களே. பசி வந்தால் நீ என்ன சாப்பிட மாட்டாயா என்ன? ஒரு நரி மானைத் தந்திரமா ஏமாற்றிய போது, ஒரு காக்கா வந்து அதைக் காப்பாற்றியது. அந்தக் கதை மாதிரிதான் இதுவும்,” எலி சொன்னது.
“அது என்ன காக்கா கதை? நான் எதுவும் கேள்விப்பட்டதே இல்லையே! அந்த கதை என்ன என்று எனக்கும் கொஞ்சம் சொல்லேன்!” லகுபட்னகா அந்த பொந்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து கதை கேட்க தயாராயிடுச்சு
“ஓ அப்படியா! சரி! அந்தக் கதையைச் சொன்னாலாவது நீ கேட்டது எப்படி வித்தியாசமா விந்தையா இருக்கிறது என்று உனக்குப் புரியும்,” எலிராஜா கதையைச் சொல்ல ஆரம்பித்தது.
ஹிதோபதேச கதைகள் தொடரின் மூன்றாவது பகுதி ஒற்றுமையே பலம் கதையோடு முடிந்தது. ஹிரண்யகா சொல்லப் போகும் கதையை அடுத்த பகுதியில் மறக்காமல் வந்து கேளுங்கள். நன்றி! வணக்கம்!