செங்கோன்மை – 1

திருக்குறளின் 55வது அதிகாரம் செங்கோன்மை. இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.

இந்த அதிகாரம் பொருட்பாலில் அரசியல் அறத்தைப் பற்றிக் கூறுகிறது. செம்மை என்றால் நீதி, நேர்மை. கோல் என்றால் தண்டு அல்லது சட்டம் என்று சொல்லலாம். செங்கோல் என்ற சொல் நேர்மையான, நடுநிலையான, நீதி தவறாத ஆட்சியைக் குறிக்கும். ஓர் அரசன் நீதி தவறாமல் நல்லாட்சி செய்து நாட்டை வழி நடத்த வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

செங்கோன்மை – 1

  • முதல் குறள்.
"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
."
இதில்
'ஓர்ந்து'
இதன் பொருள்
தன் குடிமக்கள் குற்றம் செய்தால் அதை அறிந்து.
அடுத்து
'கண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்'
இதன் பொருள்
நடுநிலையோடு ஆராய்ந்து.
அடுத்து
'தேர்ந்து'
இதன் பொருள்
குற்றத்தற்கு சொல்லப்பட்ட தண்டனையை.
அடுத்து
'செய்வஃதே முறை.
இதன் பொருள்
ஆராய்ந்து செய்வதே முறை.

அதாவது
தன் குடிமக்கள் குற்றம் செய்தால் அதை அறிந்து நடுநிலையோடு ஆராய்ந்து குற்றத்தற்கு சொல்லப்பட்ட தண்டனையை ஆராய்ந்து செய்வதே முறை.

செங்கோன்மைஅதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.

  • இரண்டாவது குறள்.

“வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
“
இதில்
‘வான்நோக்கி வாழும் உலகெல்லாம்‘
இதன் பொருள்
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை எதிர்நோக்கி வாழும்.
அடுத்து
‘மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி‘
இதன் பொருள்
அதுபோலக் குடிமக்கள் அரசனின் செங்கோலை நோக்கி வாழ்வார்கள்.

அதாவது
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை எதிர்நோக்கி வாழும். அதுபோலக் குடிமக்கள் அரசனின் செங்கோலை நோக்கி வாழ்வார்கள்.

செங்கோன்மைஅதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.

  • மூன்றாவது குறள்.

“அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.”

இதில்
‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்‘
நின்றது
இதன் பொருள்
அந்தணர் போற்றுகின்ற வேத்த்திற்கும் அதில் சொல்லப்படும் அறத்திற்கும் காரணமாய் நின்று உலகத்தைக் காப்பது எது என்றால்.
அடுத்து
‘மன்னவன் கோல்‘
இதன் பொருள்
அரசனுடைய செங்கோலாகும்.

அதாவது
அந்தணர் போற்றுகின்ற வேத்த்திற்கும், அதில் சொல்லப்படும் அறத்திற்கும் காரணமாய் நின்று உலகத்தைக் காப்பது எது என்றால் அரசனுடைய செங்கோலாகும்.

செங்கோன்மைஅதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.

  • நான்காவது குறள்.

“குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
.”
இதில்
‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடி”
இதன் பொருள்
தன் குடிமக்களை அணைத்துச் செங்கோலை செலுத்தும் மன்னனின் அடியை
அடுத்து
‘தழீஇ நிற்கும் உலகு’
இதன் பொருள்
சுற்றி உலகம் நிற்கும்.

அதாவது
தன் குடிமக்களை அணைத்துச் செங்கோலை செலுத்தும் மன்னனின் அடியைச் சுற்றி உலகம் நிற்கும்.

செங்கோன்மைஅதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது

  • ஐந்தாவது குறள்.

“இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
“
இதில்
‘இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட’
இதன் பொருள்
நூல்கள் சொல்லிய நீதி முறைப்படி செங்கோல் செய்யும் மன்னனின் நாட்டில்.
அடுத்து
‘பெயலும் விளையுளும் தொக்கு‘
இதன் பொருள்
பருவ மழையும், நல்ல விளைச்சலும் ஒருங்கே சேரந்து இருக்கும்.

அதாவது
நூல்கள் சொல்லிய நீதி முறைப்படி செங்கோல் செய்யும் மன்னனின் நாட்டில் பருவ மழையும், நல்ல விளைச்சலும் ஒருங்கே சேரந்து இருக்கும்.

செங்கோன்மைஅதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.

இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. செங்கோன்மை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் காணலாம்.

நன்றி! வணக்கம்!

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Categories
Tags
Recent posts