திருக்குறளின் 53வது அதிகாரம் சுற்றந்தழால். சுற்றம் என்றால் நமைமைச் சுற்றி உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆவார்கள்.
சுற்றந்தழால் என்பதற்குப் பொருள் நம்மைச் சுற்றி உள்ளவர்களோடு இணைந்து ஆதரவோடு நடந்து கொள்வது ஆகும். நல்லது கெட்டது என்று எது நடந்தாலும் நமக்குத் துணையாக இருப்போர்களே சிறந்த சுற்றம் ஆவார்கள். சுற்றத்தின் தேவையையும் அதன் சிறப்பையும் இந்த அதிகாரம் சொல்கிறது.
சுற்றந்தழால் – 1
- முதல் குறள்.
“பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.’
இதில்
‘பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்’
இதன் பொருள்
ஒருவன் செல்வத்தை இழந்து வறியவனானக் காலத்திலும் அவனுடைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்பு.
அடுத்து
‘சுற்றத்தார் கண்ணே உள‘
இதன் பொருள்
உறவினரிடம் உண்டு.
அதாவது
ஒருவன் செல்வத்தை இழந்து வறியவனானக் காலத்திலும் அவனுடைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்பு உறவினரிடம் உண்டு
சுற்றந்தழால் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.“
இதில்
‘விருப்பறாச் சுற்றம் இயையின்‘
இதன் பொருள்
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால்.
அடுத்து
‘அருப்பறா ஆக்கம் பலவும் தரும்‘
இதன் பொருள்
அது அவனுக்கு வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் தரும்.
அதாவது
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால் அது அவனுக்கு வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் தரும்.
சுற்றந்தழால் அதிகாரத்தின் இரண்டாவது பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.’
இதில்
‘அளவளா வில்லாதான் வாழ்க்கை’
இதன் பொருள்
சுற்றத்தாருடன் மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவன் வாழ்க்கை.
அடுத்து
‘குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று’
இதன் பொருள்
குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தது போல் ஆகும்.
அதாவது
சுற்றத்தாருடன் மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவன் வாழ்க்கை, குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தது போல் ஆகும்.
சுற்றந்தழால் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது,
- நான்காவது குறள்.
“சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.”
இதில்
‘சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்‘
இதன் பொருள்
தன் சுற்றத்தாரால் சூழும்படி வாழ்தலே ஆகும்.
அடுத்து
‘செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்’
இதன் பொருள்
செல்வம் உடைய ஒருவன் அதனால் அடையும் பயன் எது என்றால்.
அதாவது
செல்வம் உடைய ஒருவன் அதனால் அடையும் பயன் எது என்றால், தன் சுற்றத்தாரால் சூழும்படி வாழ்தலே ஆகும்.
சுற்றந்தழால் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.“
இதில்
‘கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின்‘
இதன் பொருள்
ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும் இன்சொற்கள் பேசுதலையும் செய்தால்.
அடுத்து
‘அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்‘
இதன் பொருள்
தொடரந்து பல்வகை சுற்றத்தால் சூழப்படுவான்.
அதாவது
ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், இன்சொற்கள் பேசுதலையும் செய்தால், தொடரந்து பல்வகை சுற்றத்தால் சூழப்படுவான்.
சுற்றந்தழால் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது.
இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் காணலாம்.
நன்றி! வணக்கம்!



