தெரிந்து தெளிதல் – 2

திருக்குறளின் 51வது அதிகாரமான தெரிந்துதெளிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களை போன் பகுதியில் பாரத்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பாரப்போம்.

தெரிந்துதெளிதல் என்றால் ஆராய்ந்து தெளிவடைதல் ஆகும். எந்தச் செய்லையும் செய்வதற்கு முன் அதை எப்படி செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று ஒரு தெளிவுடன் செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் கூறுகிறது.

தெரிந்து தெளிதல் – 2

  • ஆறாவது குறள்.

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.”

இதில்
அற்றாரைத் தேறுதல் ஓம்புக
இதன் பொருள்
உறவினர் இல்லாதவரை நம்பித் தேர்வு செய்யக் கூடாது.
அடுத்து
‘மற்றவர் பற்றிலர் நாணார் பழி’
இதன் பொருள்
அவர் பற்று இல்லாதவர் என்பதால் பழிக்கு அஞ்சமாட்டார்.

அதாவது
உறவினர் இல்லாதவரை நம்பித் தேர்வு செய்யக் கூடாது. அவர் பற்று இல்லாதவர் என்பதால் பழிக்கு அஞ்சமாட்டார்.

தெரிந்துதெளிதல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.

  • ஏழாவது குறள்.

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.”

இதில்
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
இதன் பொருள்
அன்பு காரணமாக அறிய வேண்டியவற்றை அறியாமல் இருப்போரை நம்பித் தேர்வு செய்வது.
அடுத்து
பேதைமை எல்லாந் தரும்’
இதன் பொருள்
எல்லா அறியாமையையும் தரும்.

அதாவது
அன்பு காரணமாக அறிய வேண்டியவற்றை அறியாமல் இருப்போரை நம்பித் தேர்வு செய்வது எல்லா அறியாமையையும் தரும்.

தெரிந்துதெளிதல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.

  • எட்டாவது குறள்.

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.”

இதல்
தேரான் பிறனைத் தெளிந்தான்’
இதன் பொருள்
ஒருவனுடைய பின்னணி பற்றி ஆராயாமல் அரசன் தேர்வு செய்தால்.
அடுத்து
வழிமுறை தீரா இடும்பை தரும்’
இதன் பொருள்
அது அவனுக்கு மட்டும் அல்லாமல் அவனுடைய வரும் தலைமுறைக்கும் தீராத துன்பங்களைத் தரும்.

அதாவது
ஒருவனுடைய பின்னணி பற்றி ஆராயாமல் அரசன் தேர்வு செய்தால், அது அவனுக்கு மட்டும் அல்லாமல் அவனுடைய வரும் தலைமுறைக்கும் தீராத துன்பங்களைத் தரும்.

தெரிந்துதெளிதல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.

  • ஒன்பதாவது குறள்.

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.”

இதில்
தேறற்க யாரையும் தேராது’
இதன் பொருள்
யாரையும் ஆராய்நது பாராமல் நம்பி தேர்வு செய்யக் கூடாது.
அடுத்து
தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்’
இதன் பொருள்
நன்று ஆராயந்து தெளிந்த பின் அவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

அதாவது
யாரையும் ஆராய்நது பாராமல் நம்பி தேர்வு செய்யக் கூடாது. நன்று ஆராயந்து தெளிந்த பின் அவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

தெரிந்துதெளிதல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.

  • பத்தாவது குறள்.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.”

இதில்
தேரான் தெளிவும்
இதன் பொருள்
ஒருவனை ஆராயாமல் தேர்வு செய்வதும்.
அடுத்து
தெளிந்தான்கண் ஐயுறவும்’
இதன் பொருள்
ஆராய்ந்து தெளிந்தவன் மேல் சந்தேகப்படுவதும்.
அடுத்து
தீரா இடும்பை தரும்
இதன் பொருள்
நீங்காத துன்பத்தைத் தரும்.

அதாவது
ஒருவனை ஆராயாமல் தேர்வு செய்வதும், ஆராய்ந்து தெளிந்தவன் மேல் சந்தேகப்படுவதும் நீங்காத துன்பத்தைத் தரும்.

தெரிந்துதெளிதல் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.

இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது.
அடுத்த பகுதியில் இடம் பெறும் அதிகாரம் தெரிந்துவினையாடல்.

நன்றி! வணக்கம்!

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags