தெரிந்து வினையாடல் -1

தெரிந்து வினையாடல். இது திருக்குறளின் 52வது அதிகாரம். இந்த அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.

செய்யும் செயல்களின் நன்மை தீமைகளை ஆறாய்ந்து செய்ய வேண்டும். அடைய வேண்டிய இலக்கை அறிந்து செயல்களைச் செய்யவேண்டும. செயல்களைச் செய்பவர்க்கு முழு உரிமை அளிக்க வேண்டும். செயல்கள் செய்யும்போது சிலர் தடம் மாறுவதும் உண்டு. இப்படி இந்த அதிகாரம் அறிவுறைகளை சொல்கிறது.

தெரிந்து வினையாடல் – 1

  • முதல் குறள்.

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.”

இதில்
நன்மையும் தீமையும் நாடி
இதன் பொருள்
எந்த ஒரு செயலின் நன்மை, தீமைகளை ஆராய்ந்து.
அடுத்து
நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்
இதன் பொருள்
அவற்றுள் நன்மை தருவதை விரும்புகின்றவன் செயலுக்கு உரியவனாக ஆளப்படுவான்.

அதாவது
எந்த ஒரு செயலின் நன்மை, தீமைகளை ஆராய்ந்து, அவற்றுள் நன்மை தருவதை விரும்புகின்றவன் செயலுக்கு உரியவனாக ஆளப்படுவான்.

தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.

  • இரண்டாவது குறள்.

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

இதில்
வாரி பெருக்கி
இதன் பொருள்
பொருள் வரும் வழியை விரிவாக்கி.
அடுத்து
‘வளம்படுத்து’
இதன் பொருள்
அந்தச் செல்வத்தை வளர்த்து.
அடுத்து
உற்றவை ஆராய்வான் செய்க வினை
இதன் பொருள்
வரும் தடைகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

அதாவது
பொருள் வரும் வழியை விரிவாக்கி, அந்தச் செல்வத்தை வளர்த்து, வரும் தடைகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.

  • மூன்றாவது குறள்.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

இதில்
அன்பறிவு தேற்றம் அவாவின்மை’
அன்பு, அறிவு, கலங்காமல் செய்யும் தெளிவு, ஆசையில்லாமை.
அடுத்து
இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு
இதன் பொருள்
ஆகிய இந்த நான்கு குணங்கள் உள்ளவனையே தேர்வு செய்ய வேண்டும்.

அதாவது
அன்பு, அறிவு, கலங்காமல் செய்யும் தெளிவு, ஆசையில்லாமை ஆகிய இந்த நான்கு குணங்கள் உள்ளவனையே தேர்வு செய்ய வேண்டும்.

தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.

  • நான்காவது குறள்.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்”
.
இதில்
எனைவகையான் தேறியக் கண்ணும்
இதன் பொருள்
எல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்து தொழில் செய்யும் போதும்.
அடுத்து
வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்’
அந்தச் செயல்களால் வேறுபடும் மக்கள் உலகில் பலருண்டு.

அதாவது
எல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்து தொழில் செய்யும் போதும் அந்தச் செயல்களால் வேறுபடும் மக்கள் உலகில் பலருண்டு.

தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.

  • ஐந்தாவது குறள்.

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று
.”
இதில்
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால்’
இதன் பொருள்
செய்யும் தொழிலை நன்றாக ஆராய்ந்து தடைகளை நீக்கி முடிவு செய்யும் திறமை உள்ளவனை அல்லாமல்.
அடுத்து
வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று’
இதன் பொருள்
இவன் நம்மிடத்தில் அன்புள்ளவன் என்ற காரணத்தால் தொழிலை ஒப்படைக்கக் கூடாது.

அதாவது
செய்யும் தொழிலை நன்றாக ஆராய்ந்து, தடைகளை நீக்கி, முடிவு செய்யும் திறமை உள்ளவனை அல்லாமல் இவன் நம்மிடத்தில் அன்புள்ளவன் என்ற காரணத்தால் தொழிலை ஒப்படைக்கக் கூடாது.

தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பாரப்போம்.

நன்றி! வணக்கம்!

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags