Shalivahana’s Terracotta Army-2
வணக்கம். போன வாரம் ஷதகர்ணி என்ற ஷாலிவாகனன் ஒரு குயவனிடம் இருந்து மண்பானைகள் செய்யக் கத்து கிட்டு மண்ணில் நிறைய போர்வீரர்கள் செஞ்சி ஒரு கிணற்றில் போட்டுச் சேர்த்து வஞ்சிருந்ததையும் ,வழிப்பறி கொள்ளையர்களை தோற்கடிச்சதனால் கொள்ளையர்கள் ப்ரதிஷ்தானாவின் ராஜாவிடம் போய் ஷாலிவாகன பத்தி பொய்யாகப் புகார் கொடுத்ததையும் பார்த்தோம் . அடுத்து என்ன நடந்ததென்று இந்த வாரம் பார்க்கலாமா!
ஷாலிவாகனனின் மண் வீரர்கள்-2
ப்ரதிஷ்தானாவின் அரசன் நாகபானாவுக்கு கொள்ளையர்கள் சொன்னதைக் கேட்டு ஒரே கோபம். ” அப்படியா !அவனை என்ன செய்யப்போகிறேன் பாருங்கள்” சொல்லிவிட்டு ப்ரதிஷ்தானாவை விட்டு படையுடன் கிளம்பினான். அரசன் படையுடன் வரும் செய்தி கேட்டு ஷாலிவாகனனின் தோழர்கள் உஜ்ஜைனுக்கு தகவல் அனுப்பி ராஜா விக்ரமாதித்யனிடம் உதவி கேட்கலாமென்று சொன்னார்கள். அப்படி செஞ்சா விக்ரமாதித்யன் பரதிஷ்தானவை உஜ்ஜைனுடன் இணைத்து விடுவான் என்று சொல்லி ஷாலிவாகனன் அதற்கு ஒத்துக்கல. ” மக்கள் நம் பக்கம். நாம் எல்லோரும் சேந்து சண்டை போடுவோமென்று” தைரியம் சொன்னான். அதன் படி எல்லோரும் ஆயுதங்களோடு பதுங்கி இருந்தார்கள்.
நாகபானாவோட சேனையைப் பார்த்ததும் ஆக்ரோஷமா சண்டை போட்டார்கள். போரில் நாகபானா உயிர் இழந்தான். ஷாலிவாகனனை யானைமேல் உட்காரவைத்து “வெற்றி வெற்றி”யென்று கோஷம்போட்டுட்டே ஊர்வலம் வந்தார்கள். குயவனுக்கும் கௌதமிக்கும் இதைக்கேட்டு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. ஷாலிவாகனன் இப்போது ப்ரதிஷ்தானாவின் ராஜா. சர்வ வாமா, குணாத்யா என்ற 2 புத்திசாலி மந்திரிகள் ஷாலிவாகனனுக்கு நாட்டை ஆள்வதில் உதவியா இருந்தார்கள்.
ஷாலிவாகன்னுக்கும் நாகானிகா என்ற புத்திசாலி பெண்ணுக்கும் திருமணம் நடந்தது .ஒரு நாள் விளையாட்டாக நாகானிகா ஷாலிவாகனனுக்கு சமஸ்கிருதத்தில் புலமை இல்லாததைக் கேலி செய்ததும், ஷாலிவாகனன் சமஸ்கிருதம் கத்துக்கனும்னு பண்டிதர்களை வரச்சொல்லி அவனுடைய ஆசையைச் சொன்னான். பண்டிதர்களும் குண்டாத்யாவும் 2 வருஷம் ஆகுமென்று சொன்னார்கள். ஆனால் சர்வ வாமா ஷாலிவாகனனா் 6 மாதத்தி்ல் பாண்டித்தியம் அடைய முடியுமென்று சொன்னார். “அப்படி 6 மாதத்தி்ல் ஷாலிவாகனனா் பாண்டித்தியம் அடைய முடியுமென்றால் நான் சமஸ்கிருத மொழியையும், ப்ராக்ரிதி மொழி பேசுவதையும் நிறுத்திவிடுவே”ன்னு குண்டாத்யா சபதம் போட்டார். ப்ராக்ரிதியும் அந்த காலத்தில் வழக்கிலிருந்த ஒரு மொழி.
இரவு பகல் பார்க்காமல் ஷாலிவாகனன் உழைத்ததால் 6 மாதத்தி்ல் பாண்டித்தியம் பெற்று விட்டான். குண்டாத்யா செஞ்ச சபதத்தினால் அரண்மனையை விட்டு வெளியேறி காட்டுக்குப் போய்ட்டாரு. கொஞ்ச நாளில் அரண்மனைக்கு மாமிசம் அனுப்பும் வேடர்கள் கிட்ட இருந்து விந்திய மலையில் ஒரு சாது தன் கவிதைகளைச் சொல்லும்போது எல்லா மிருகங்களும் அமைதியா அவர் முன்னாடி கூடி நிற்பதால் வேட்டை ஆட முடியவில்லை என்ற செய்தி வந்தது. உடனே ஷாலிவாகனன் தன் பரிவாரத்துடன் அந்த சாதுவைத் தேடி வந்தான். அப்ப அந்த சாது அவருடைய கவிதைகளை உரக்க படித்திவிட்டு அதை நெருப்பில் போட்டு எரித்தார். அந்த கவிதைகளைக் கேட்ட ஷாலிவாகனன்” அடடா பைசாச மொழி இவ்வளவு இனிமையாக இருக்குதே”னு அந்த சாதுவை தடுத்தான். அந்த சாது வேற யாரும் இல்ல. குண்டாத்யாதான். ஷாலிவாகனன் அவரை திரும்ப அரண்மனைக்குக் கூப்பிட்ட போது மீதி இருந்த கவிதைகளை கொடுத்துட்டு தன் வாழ்க்கை பூர்த்தியாகிவிட்டதுனு சொல்லி காட்டிலேயே இருந்துவிட்டார்.
நாட்கள் இப்படிப் போகும்போது உஜ்ஜைனில் ராஜா விக்ரமாதித்யன் கிட்ட ராஜபுரோகிதர்கள்” அரசே உங்களுக்கு உஜ்ஜைனுக்கு தெற்கிலிருந்து ஒரு குயவன் வளர்த்த இளம் வயது அரசனால் ஆபத்து வரவிருக்கிறது” ஒரு எச்சரிக்கை கொடுத்தார்கள். உடனே விக்ரமாதித்யன் அவனுடைய சேவகனான வேதாளத்தை கூப்பிட்டு ப்ரதாஷ்தான போய் ஷாலிவாகனனை அடக்கி, பிடித்து கூட்டிவிட்டு வரக் கட்டளை போட்டான். வேதாளமும் எஜமானனுக்கு விசுவாசமா ப்ரதிஷ்தானா வந்து ஷாலிவாகனன் குயவனா இருந்தாலும் அவனுடைய வீரதீர சகஸங்கள கேட்டு இவனால் தான் ராஜா விக்ரமாதித்யனுக்கு ஆபத்து வரும் என்று தீர்மானித்து அவனை அதோடு மல்யுத்தத்துக்குக் கூப்பிட்டது. ஷாலிவாகனனுக்கு பயமே கிடையாதே. தைரியமா வா மோதிப்பார்க்கலாம்னு அதோடு மல்யுத்தத்துக்குப் போனான். முதலில் வேதாளம் அவனை ஒரே தூக்கா தூக்கி கீழே போட்டது. ஷாலிவாகனன் சுதாரித்துக்கொண்டு காலை நன்றாக ஊன்றி வேதாளத்தைப் பிடித்து அதனுடைய நெஞ்சுப்பகுதியில் ஓர் அறை விட்டான். தன்னால் அவனை ஜெயிக்க முடியாதென்று தெரிந்து வேதாளம் அவனிடம் மன்னிப்பு கேட்டது.
நேரா விக்ரமாதித்யன்கிட்ட போய் ஷாலிவாகனனை நேர்வழியில் ஜெயிக்க முடியாது போரில் தான் கொல்ல முடியுமென்று சொன்னது. விக்ரமாதித்யனும் போர் வீரர்களோடு ஷாலிவாகனனுடன் போர் தொடுக்க ப்ரதிஷ்தானாவை நோக்கி வீராவேசமா வந்தான். ஷாலிவாகனனின் சிறிய சேனையைப் பார்த்து கேலியும் செய்தான். போரும் ஆரம்பமானது. ஷாலிவாகனனின் வீரர்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. ஷாலிவாகனன் முன்பு மண்ணில் செய்து பத்திரப்படுத்திய மண்வீரர்களை அவனோட மந்திர சக்தியால் உயிர் கொடுக்க சேனை வீரர்கள் எல்லா பக்கத்திலிருந்தும் வர ஆரம்பித்தார்கள். விக்ரமாதித்யன் எல்லா பக்கத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான வீரர்கள் வரவும் திகைத்தான். அவன் கேலி செய்த படை அவனை வென்றது. போரில் விக்ரமாதித்யன் உயிர் இழந்தான். போரில் வென்ற ஷாலிவாகனன் உஜ்ஜைனையும் தன் நாட்டோடு சேர்த்து அரசாள ஆரம்பித்தான்.
ஷாலிவாகனனின் இந்த வெற்றியிலிருந்துதான் ஷாலிவாகன சகாப்தம் புது வருடம் கணக்கிடப்படுகிறது.
நன்றி! வணக்கம்!