இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 18வது அதிகாரமான வெஃகாமை. வெஃகாமை என்றால் பிறருடைய பொருட்களின் மேல் ஆசைப் படாமல் இருப்பது. ஆசை வந்து விட்டால் கட்டுப்படுத்த முடியாமல் நினைத்ததை அடைவதற்கு எதையும் செய்யச் சிலர் தயங்கமாட்டார்கள். இது அழிவைத்தான் உண்டாக்கும். நடுநிலைத் தவறி பிறர் பொருளை விரும்புதல் பெருங்குற்றம் ஆகும். பிறர் பொருளைக் கவர நினைப்பதை முளையிலேயே அகற்ற வேண்டும் என்று இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது.
வெஃகாமை-1
- முதல் குறள்.
“நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்”.
இதில்
‘நடுவின்றி நன்பொருள் வெஃகின்‘
இதன் பொருள்
நடுவுநிலை இல்லாமல் பிறர் பொருளை வஞ்சித்து அடைய விரும்பினால்
அடுத்து
‘குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்‘
இதன் பொருள்
அந்த இச்சை அவன் குடியைக் கெடுத்துக் குற்றத்தினையும் அப்பொழுதே கொடுக்கும்.
அதாவது
நடுவுநிலை இல்லாமல் பிறர் பொருளை வஞ்சித்து அடைய விரும்பினால் அந்த இச்சை அவன் குடியைக் கெடுத்துக் குற்றத்தினையும் அப்பொழுதே கொடுக்கும்.
வெஃகாமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.“
இதில்
‘படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்‘
இதன் பொருள்
பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பி பழி தரும் செயல்களைச் செய்யமாட்டார்.
அடுத்து
‘நடுவன்மை நாணு பவர்‘
இதன் பொருள்
நடுவுநிலை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குபவர்.
அதாவது
நடுவுநிலை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குபவர்
பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பி பழி தரும் செயல்களைச் செய்யமாட்டார்.
வெஃகாமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்”.
இதில்
‘சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே‘
இதன் பொருள்
பிறர் பொருளை வஞ்சித்து அடையும் சிற்றின்பத்திற்கு ஆசைப்பட்டு அறம் இல்லாதா செயல்களைச் செய்ய மாட்டார்.
அடுத்து
‘மற்றின்பம் வேண்டு பவர்‘
அறநெறியால் வரும் நிலையான இன்பத்தை விரும்புபவர்கள்.
அதாவது
அறநெறியால் வரும் நிலையான இன்பத்தை விரும்புபவர்கள் பிறர் பொருளை வஞ்சித்து அடையும் சிற்றின்பத்திற்கு ஆசைப்பட்டு அறம் இல்லாதா செயல்களைச் செய்ய மாட்டார்.
வெஃகாமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்”.
இதில்
‘இலமென்று வெஃகுதல் செய்யார்‘
இதன் பொருள்
யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணி பிறர் பொருளை விரும்பமாட்டார்.
அடுத்து
‘புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்‘
ஐம்புலன்களையும் அடக்கி வென்ற குற்றமில்லா அறிவுடையவர்.
அதாவது
ஐம்புலன்களையும் அடக்கி வென்ற குற்றமில்லா அறிவுடையவர் யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணி பிறர் பொருளை விரும்பமாட்டார்.
வெஃகாமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்”.
இதில்
‘அஃகி அகன்ற அறிவென்னாம்‘
இதன் பொருள்.
நுணுக்கமான பல நூல்கள் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு என்ன பயன்?
அடுத்து
‘யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்‘
இதன் பொருள்
பிறர் பொருளைக் கவர விரும்பி அறமில்லாத செயல்களைச் செய்பவரின்.
அதாவது
பிறர் பொருளைக் கவர விரும்பி அறமில்லாத செயல்களைச் செய்பவரின் நுணுக்கமான பல நூல்கள் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு என்ன பயன்?
வெஃகாமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிந்தது. அடுத்து உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!