இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 20வது அதிகாரமான பயனில சொல்லாமையிலிருந்து முதல் ஐந்து குறள்கள்.
இந்த அதிகாரத்தின் விளக்கம் பயனற்ற வீண் சொற்களைப் பேசாமலிருப்பது. புறங்கூறுவது, கொடுமையான சொற்களைக் கூறுவது, பொய்மை, ஏமாற்று வார்த்தைகளைக் கூறுவது இதுபோல பயனற்ற சொற்களைக் கூறுவதால் பிறரால் இழிக்கப்படுவர். அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயனில்லாத சொற்களைக் கூறமாட்டார் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
பயனில சொல்லாமை 1
- முதல் குறள்.
“பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்“.
இதில்
‘பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
இதன் விளக்கம்‘
அறிவுடையவர் பலரும் வெறுக்கும்படியாக பயனில்லாத சொற்களைப் பேசுகின்றவன்
அடுத்து
‘எல்லாரும் எள்ளப் படும்’
இதன் விளக்கம்
எல்லாராலும் இகழப்படுவான்.
அதாவது
அறிவுடையவர் பலரும் வெறுக்கும்படியாக பயனில்லாத சொற்களைப் பேசுகின்றவன் எல்லாராலும் இகழப்படுவான்.
பயனில சொல்லாமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது“.
இதில்
‘பயனில பல்லார்முன் சொல்லல்‘
இதன் விளக்கம்.
பயனில்லாத சொற்களைப் பலர் முன்னே ஒருவன் சொல்வது
அடுத்து
‘நயனில நட்டார்கண் செய்தலின் தீது‘
இதன் விளக்கம்
நண்பர்களிடம் அறம் இல்லாத செயல்களைச் செய்வதைவிடத்
தீமையானது.
அதாவது
பயனில்லாத சொற்களைப் பலர் முன்னே ஒருவன் சொல்வது நண்பர்களிடம் அறம் இல்லாத செயல்களைச் செய்வதைவிடத் தீமையானது.
பயனில சொல்லாமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை“.
இதில்
‘நயனிலன் என்பது சொல்லும்‘
இதன் விளக்கம்
இவன் நீதி இல்லாதவன் என்பதை உணர்த்தும்.
அடுத்து
‘பயனில பாரித் துரைக்கும் உரை’
இதன் விளக்கம்
பயனில்லாத சொற்களை ஒருவன் விரிவு படுத்தி உரைக்கும் போது
அதாவது
பயனில்லாத சொற்களை ஒருவன் விரிவு படுத்தி உரைக்கும் போது இவன் நீதி இல்லாதவன் என்பதை உணர்த்தும்.
பயனில சொல்லாமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து“.
இதில்
‘நயன்சாரா நன்மையின் நீக்கும்’
இதன் விளக்கம்
அச்சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிடமிருந்து நீக்கிவிடும்.
அடுத்து
‘பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து’
இதன் விளக்கம்
பயனற்ற பண்பில்லாத சொற்களை ஒருவன் பலரிடம் சொன்னால்
அதாவது
பயனற்ற பண்பில்லாத சொற்களை ஒருவன் பலரிடம் சொன்னால் அச்சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிடமிருந்து நீக்கிவிடும்.
பயனில சொல்லாமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்“.
இதில்
‘சீர்மை சிறப்பொடு நீங்கும்‘
இதன் விளக்கம்
அவர்களின் மேன்மையும் நன்மதிப்பும் நீங்கிவிடும்.
அடுத்து
‘பயனில நீர்மை யுடையார் சொலின்‘
இதன் விளக்கம்
நற்குணமுடைய பெரியோர்கள் பயனில்லாத சொற்களைச் சொன்னால்
அதாவது
நற்குணமுடைய பெரியோர்கள் பயனில்லாத சொற்களைச் சொன்னால் அவர்களின் மேன்மையும் நன்மதிப்பும் நீங்கிவிடும்.
பயனில சொல்லாமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த பகுதி இந்த குறளோடு முடிவடைந்தது. மீதி உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!