(Navarathri-Bommai Golu)
வணக்கம். நவராத்திரி வரப்போகிறது. கொலு வைக்க தயாராயிட்டிருப்பீங்க.
இதற்கு முன்னாடி வந்த நவராத்திரி podcastல் இந்த ஒன்பது நாட்களும் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படி கொண்டாடுவாங்கனு கேட்டிருப்பீங்க. இந்த podcastல் பொம்மை கொலுவப் பத்தி கேக்கப்போறீங்க.
நவராத்திரி-பொம்மை கொலு
கொலு என்ற வார்த்தைக்குப் பொருள் “அழகு “என்றும் சொல்லலாம் அல்லது “தெய்வீக இருப்பு” என்றும் சொல்லலாம். தமிழ்நாட்டில் பொம்மைகள் வரிசையா படியில் அடுக்கி அழகா பொம்மை கொலுவைப்பாங்க. ஆந்திரா, தெலுங்கானால அதுக்கு “பொம்மல கொலு”னு பேர். கரநாடகாவில் அதைக் “கொம்பே ஹப்பா”னு சொல்வார்கள். இந்த நவராத்திரியில் தேவி வழிபாட்டுக்கும் மட்டும் இல்லாமல் பொம்மைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.
இந்த பொம்மைகள் எப்படி எந்த வரிசையில் வைப்பார்கள் ?
இப்போது எல்லாம் மரத்திலான இல்லையென்றால் உலோகத்தாலான படிகள் கிடைக்கிறது. அந்த காலத்தில் அந்த மாதிரி கிடைக்காது. அட்டைப்பெட்டிகள், டின் பெட்டிகள், பலகைகள் இந்த மாதிரி சாமான்கள் வைத்துதான் படிகள் அமைப்பார்கள். இந்த கொலுப்படிகள் 3,5,7,9, எண்ணிக்கையி் இருக்கும். மிகவும் ஆர்வம் உள்ளவங்க 11 படிகள் கூட வைப்பார்கள். கொலுப்படி மேல் விரிப்பு ஒன்ற விரிச்சி பொம்மைகள் வைப்பார்கள். நாங்கள் சின்ன பசங்களா இருந்த போது வேஷ்டியை உபயோகிப்போம். இப்போது அழகான விரிப்புகள் நிறையக் கிடைக்கிறது.
என்ன மாதிரி பொம்மைகள் வைப்பார்கள் என்று பார்ப்போமா! வழக்கமா மரத்தாலான பொம்மைகள், களிமண் பொம்மைகள், தேங்காய் ஓடுகளாலான பொம்மைகள் வச்சிட்டிருந்தாங்க. பெரும்பாலும் மரப்பாச்சி பொம்மைகள், தஞ்சாவூர் பொம்மைகள், கொண்டப்பள்ளி பொம்மலு ,சன்னப்பட்டிண பொம்மைகள், சொப்பு சாமான்கள் இந்த கொலுவில் இருக்கும். மரப்பாச்சி பொம்மைகள் பேரிலிருந்தே தெரிஞ்சிக்கலாம் மரத்திலிருந்து செய்யும் பொம்மைகளென்று. சிவப்புச்சந்தனம், தேக்கு, கருங்காலி வகை மரங்களிலிருந்து மனித உருவங்கள் செய்வார்கள். கல்யாணத்தில் கொடுக்கிற சாமான்களில் ஒரு ஜோடி ஆண், பெண் பொம்மைகளும் உண்டு. இந்த பொம்மைகளுக்குக் கட்ட புடவைகளும் வேஷ்டியும் கிடைக்கும். நகைகள்கூட போடலாம். இந்த மரப்பாச்சி பொம்மைகள் கர்நாடகாவி்ல் “பட்டாடை பொம்பேனு” சொல்வார்கள். இந்த மரப்பாச்சி பொம்மைகள் கொலுப்படிகளில் மேல்பகுதியில் வைப்பார்கள். திருப்பதி பக்கத்தில் உள்ள செட்டிகுண்டாங்கர ஊர் இந்த மரப்பாச்சி பொம்மை செய்வதில் புகழ் வாய்ந்தது. இந்த மரப்பாச்சி பொம்மைகள் பகவான் விஷ்ணுவாகவும் பூதேவியாவும பாப்பாங்க.
களிமண் பொம்மைகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் தயாரிக்கிறார்கள். மதுரைக்குப் பக்கத்தில் உள்ள விளாச்சேரி கிரமம், கடலூர் பக்கத்தில் உள்ள வண்டிப்பாளையம், பண்ருட்டி, கும்பகோணம் இங்கெல்லாம் களிமண் பொம்மைகள் சிறப்பா கிடைக்கும். காஞ்சிபுரத்தில் ஒரு தெருவுக்கே பொம்மைக்கார வீதியென்று இருக்கிறது தெரியுமா? இந்த தெருவி்ல் உள்ளவர்கள் எல்லாரும் களிமண் பொம்மை பண்ற தொழிலில் இருப்பார்கள். இந்த கலைநயமிக்க தொழில் பரம்பரை பரம்பரையா தொடர்ந்து வரும். களிமண்ணைப் பிசைந்து பதப்படுத்தி அச்சிகளில் வார்த்து எடுப்பார்கள். அந்த ஈர பொம்மைகளை வெளியில் எடுத்து சமமாக்கி, அம்சங்கள் கூராக்கி ,சூரிய ஒளியில் காய வைப்பார்கள். நல்லா காய்ஞசு உருவம் வந்ததுக்குப்புறம் வர்ணங்கள் அடிப்பார்கள். இயற்கை வர்ணங்கள உபயோகப்படுத்திட்டிருந்தவங்க இப்போது கடையில் கிடைக்கிற வண்ணங்களையும் உபயோகிக்கிறார்கள். கொலுவில் முக்கியமான அஷ்டலக்ஷ்மி, துர்கா, சரஸ்வதி எல்லா தேவி பொம்மைகளும் கிடைக்கும்.
விஷ்ணுவின் பத்து அவதாரங்களான தசாவதாரம், ராமாயண காட்சிகள், மகாபரத்தில் வரும் கதாபாத்திரங்கள், விநாயகரும் முருகனும் மாம்பழத்துக்குப் போட்டிப் போடும் காட்சிகள் இப்படி கடவுள்களின் பொம்மைகள் நிறையப் பார்க்கலாம். இந்த கடவுள் பொம்மைகளுக்குப்புறம் கடவுளின் அடியார்களான ஆழ்வார்கள், நாயன்மார்கள் இவர்களுடைய பொம்மைகள் வரும். அடுத்ததா புகழ் வாய்ந்த மனிதர்களுடைய பொம்மைகளும் வரும். திருவள்ளுவர், மகாத்மா காந்தி, பாரதியார் அப்புறம் கர்நாடக இசைக்குப் பெயர் பெற்ற தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர்.சியாமா சாஸ்திரி இப்படி. இந்த பொம்மைகள் மட்டும் இல்லாமல் நடைமுறை வாழ்வில் உள்ளவர்கள் பொம்மைகளும் வரும். உழவர்கள், வியாபாரிகள், கல்யாண ஊர்வலங்கள், கோவிலைச் சுற்றி உள்ள காட்சிகள், கிராமிய வழக்கங்கள் இப்படி எல்லாம் கிடைக்கும்.
அடுத்ததா தஞ்சாவூர் பொம்மைகளைப் பார்க்கலாம். தஞ்சை பெரிய கோவிலும் அங்க உள்ள காவிரி நதியும் தஞ்சைக்கு அடையாளம். காவிரி கரையில் கிடைக்கிற களிமண்ணை வைத்து இந்த தஞ்சாவூர் பொம்மைகள் தயார் செய்கிறார்கள்.
நிச்சயமா தலை ஆட்டி பொம்மையை பார்த்திருப்பீங்க. தலை ஒரு பாகமாகவும் உடம்பு இன்னொரு பாகமாகவும் இருக்கும். கழுத்துப் பக்கத்தில் ஒரு கம்பியை மையமா தலையை நிற்க வைப்பார்கள். தலையைத் தொடும்போது அந்த தலை ஆடும். நடனம் ஆடும் பொம்மைகள் மூன்று பாகமா இருக்கும். பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி போன்ற பாரம்பரிய நடன பொம்மைகள் நிறைய இருக்கிறது. கிராமிய நடனக்கலையான பொய்க் கால் குதிரை பொம்மைகளும் இருக்கிறது. இதைத் தவிர ஆச்சி, செட்டியார் பொம்மைகளும் தலை ஆட்டி பொம்மைகளா வரும்.
தஞ்சாவூர்க் குண்டு சட்டி பொம்மைகள். இது தஞ்சாவூரில் செய்யும் இன்னொரு வகை பொம்மை. கீழ்பாகம் வளைந்து கனமா இருக்கும். அதைத் தொட்டு ஆட்டும்போது முன்னும் பின்னும் ஊசலாடும். இந்த பொம்மைகளில் ராஜா ராணி பொம்மைகள் தஞ்சாவூர் சரபோஜி மன்னரையும் ராணியையும் குறிக்கும்.
அடுத்ததா சொப்பு சாமான்கள். சமையல் அறையில் பயன்படுத்தும் பாத்திரங்கள், சாமான்கள் சின்ன வடிவில் குழந்தைகள் விளையாடுவதுக்கு ஏற்ற மாதிரி வரும். மரக்கட்டை, ஸ்டீல். மண்கற்பாறையில் இந்த சாமான்களைச் செய்வார்கள். நாங்கள் கூட சின்ன வயசில் இந்த சொப்பு சாமான்கள வச்சி தோசை செய்ற மாதிரி விளையாடி இருக்கிறோம். மரக்கட்டையில் அழகான வர்ணங்களோடு வரும் சொப்பு சாமான்கள் அம்பாசமுத்திரமென்ற தமிழ்நாட்டில் உள்ள ஊரில் தயார் செய்கிறார்கள். சன்னப்பட்டிணங்கிற ஊரில் நிறைய பொம்மைகள் தயாரிக்கிறார்கள். அது இந்தியாவின் பொம்மை நகரம்னு கூடச் சொல்லலாம். இந்த ஊர் பெங்களூருக்கும் மைசூருக்கும் நடுவில் இருக்கிறது. ஆரம்பத்தில் வெட்பாலை அதாவது ivory tree மரத்தில் பண்ணுவார்கள். இப்போது வேற மரவகைகளும் பொம்மைகள் செய்ய உபயோகிக்கிறார்கள்.. இந்த பொம்மைகளுக்கு உபயோகப்படுத்தும் வர்ணங்கள் காய்கறிகளிலிருந்து தயார் செய்கிறார்கள். விலங்குகள், மனிதர்கள் ,வாகனங்கள், இசைக்கருவிகள் இப்படி பலவகை பொம்மைகள் பார்க்கமுடியும்.
கொண்டபள்ளி பொம்மைகள்.
ஆந்திரப் பிரதேசத்தி் விஜயவாடா பக்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராம் கொண்டபள்ளி. இந்த கலை பல நூறு ஆண்டுகளாக இந்த ஊரில் செழிப்பாக வளர்ந்து வந்திருக்கு. அந்த கிராமத்தில் சுத்தி உள்ள கொண்டபள்ளி மலையில் வளரும் தெல்ல பொனிக்கி அதாவது white sander treeயை பயன்படுத்தி இந்த பொம்மைகள் செய்கிறார்கள். இந்துமத கடவுள்கள், விலங்குகள், பறவைகள், அன்றாட வாழ்க்கையில் நாம் பாக்கும் காட்சிகள் இப்படி நிறைய பொம்மைகள் சொல்லிகிட்டே போகலாம். கிராமிய காட்சிகளோடு நகர வாழ்க்கை காட்சிகளும் இப்பது கிடைக்கிறது. இந்த பொம்மைகளும் கண்ணைக்கவரும் வர்ணங்களோடு கிடைக்கும். கொலுவில் செட்டியார் பொம்மையைச் சுத்தி தானியங்கள், பருப்பு வகைகள் வழக்கமா வைத்து ஒரு கடையுடைய தன்மை இருக்கும். கொண்டபள்ளி, சன்னப்பட்டிணம் பொம்மைகள் களிமண் பொம்மைகளோடு சேர்த்து வைப்பார்கள். இப்பல்லாம் ராஜஸ்தான் மேற்கு வங்காளத்திலிருந்து நவராத்திரி வரும்போது சென்னைக்கு வந்து பொம்மைகள் விற்பதைப் பார்க்க முடிகிறது.
இந்த கலைகள் பாரம்பரியமா ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குத் தொடர்ந்து இன்னும் நிலைத்து இருக்கிறது. நவராத்திரி வரும் போதுதான் அவர்களுக்கு வியாபாரமும் நடக்கும். மீதி காலகட்டத்தில் அவர்களுக்கு வியாபாரம் ஆகாது. அவர்களுடைய வாழ்வாதாரம் பதிக்கப்படுகிறது. நமது பங்குக்கு அவர்களுடைய கலைகளை ஊக்குவித்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஒரு தடவை வாங்கினால் மட்டும் போதுமா? யாருக்காவது பரிசுகொடுக்கும்போது இந்த பொம்மைகள் வாங்கிக் கொடுக்கலாமே!
மீண்டும் சந்திக்கும் வரை நன்றி! வணக்கம்