இந்த பகுதியில் திருக்குறளின் பன்னிரண்டாம் அதிகாரமான நடுவுநிலைமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பொருளோடு பார்ப்போம்.
அதிகார விளக்கம்
நியாயம், நேர்மையிலிருந்து விலகாமல் எப்பொழுதும் எல்லாரிடத்திலும் ஒரே நிலைப்பாட்டோடு நடப்பதே நடுவுநிலைமை ஆகும். உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை,படித்தவன், படிக்காதவன், நண்பன், விரோதி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லோரிடமும் நடுவுநிலைமையோடு இருப்பதே அறம் ஆகும். எக்காரணத்தினாலும் நடுவுநிலைமை தவறக்கூடாது. யாரிடமும் பாரபட்சம் பரக்காமல் இருப்பதே நடுநிலைமை ஆகும்.
நடுவு நிலைமை 1
- முதல் குறள்.
“தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்”.
இதில்
“தகுதி எனவொன்று நன்றே“
இதன் பொருள்
நடுவுநிலைமை என்று சொல்லப்படும் அந்த அறமே வாழ்க்கைக்கு நன்மையாகும்
அடுத்து
“பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்“
இதன் பொருள்
பகைவர், நண்பர்,அயலார் என்று எல்லாரிடமும் நீதி தவறாமல் நடந்து கொண்டால்,
அதாவது
பகைவர், நண்பர்,அயலார் என்று எல்லாரிடமும் நீதி தவறாமல் நடந்து கொண்டால், நடுவுநிலைமை என்று சொல்லப்படும் அந்த அறமே வாழ்க்கைக்கு நன்மையாகும்.
நடுவுநிலைமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.“
இதில்
“செப்பம் உடையவன் ஆக்கம்“
இதன் பொருள்
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளமானது,
அடுத்து
“சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து“
இதன் பொருள்
அழிவில்லாமல் அவன் வழியில் வருவோர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.
அதாவது
நடுவுநிலை உடையவனின் செல்வவளமானது, அழிவில்லாமல் அவன் வழியில் வருவோர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.
நடுவுநிலைமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.“
இதில்
“நன்றே தரினும்“
இதன் பொருள்
நன்மையே தருவதாக இருந்தாலும்
அடுத்து
“நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்“
இதன் பொருள்
நடுவுநிலைமை தவறி உண்டாகும் செல்வத்தை அப்போதே கைவிடவேண்டும்.
அதாவது
நன்மையே தருவதாக இருந்தாலும் நடுவுநிலைமை தவறி உண்டாகும் செல்வத்தை அப்போதே கைவிடவேண்டும்.
நடுவுநிலைமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.”
இதில்
“தக்கார் தகவிலர் என்பது“
இதன் பொருள்
நடுவுநிலைமை உடையவர், நடுவுநிலைமை இல்லாதவர் என்பதை
அடுத்து
“அவரவர் எச்சத்தாற் காணப் படும்“
இதன் பொருள்
அவரவர்களுக்குப் பின் நிற்கும் புகழாலும் பழியாலும் அறியப்படும்.
அதாவது
நடுவுநிலைமை உடையவர், நடுவுநிலைமை இல்லாதவர் என்பதை
அவரவர்களுக்குப் பின் நிற்கும் புகழாலும் பழியாலும் அறியப்படும்.
நடுவுநிலைமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.”
இதில்
“கேடும் பெருக்கமும் இல்லல்ல“
இதன் பொருள்
தீமையும் நன்மையும் வாழ்வில் இல்லாதவை அல்ல
அடுத்து
“நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி“
அதை அறிந்து நடுவுநிலைமை தவறாமல் இருப்பதே சான்றோர்க்கு அழகாகும்.
அதாவது
தீமையும் நன்மையும் வாழ்வில் இல்லாதவை அல்ல
அதை அறிந்து நடுவுநிலைமை தவறாமல் இருப்பதே சான்றோர்க்கு அழகாகும்.
நடுவுநிலைமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
நடுவுநிலைமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது. இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. அடுத்து உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியால் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!