திருக்குறளின் பதினொன்றாவது அதிகாரமான செய்ந்நன்றி அறிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். இந்த பகுதியில் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களைப் பார்ப்போம்.
நமக்குப் பிறர் செய்த உதவியை மறக்காமல் நன்றியோடு இருக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. நன்றி மறப்பது அறம் இல்லை என்றும் சொல்கிறது.
செய்ந்நன்றி அறிதல் 2
- ஆறாவது குறள்.
“மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.“
இதில்
“துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு“
இதன் பொருள்
துன்பம் வந்த காலத்தில் துணையாக இருந்தவரின் நட்பை விடாதிருத்தல் வேண்டும்.
அடுத்து
“மறவற்க மாசற்றார் கேண்மை“
மனதில் குற்றமில்லாதவர்களின் நட்பை மறவாதிருக்க வேண்டும்.
அதாவது
துன்பம் வந்த காலத்தில் துணையாக இருந்தவரின் நட்பை விடாதிருத்தல் வேண்டும். மனதில் குற்றமில்லாதவர்களின் நட்பை மறவாதிருக்க வேண்டும்.
செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.“
இதில்
“தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு“
இதன் பொருள்
தம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பினை
அடுத்து
“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்“
பெரியோர் ஏழேழு பிறவியிலும் மறவாமல் போற்றுவர்.
அதாவது
தம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பினை பெரியோர் ஏழேழு பிறவியிலும் மறவாமல் போற்றுவர்.
செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.”
இதில்
“நன்றி மறப்பது நன்றன்று“
இதன் பொருள்
ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல.
அடுத்து
“நன்றல்லது அன்றே மறப்பது நன்று“
இதன் பொருள்
அவர் செய்த தீமையை அப்பொழுதே மறப்பது நல்லதாகும்.
அதாவது
ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் செய்த தீமையை அப்பொழுதே மறப்பது நல்லதாகும்.
செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.”
இதில்
“கொன்றன்ன இன்னா செயினும்“
இதன் பொருள்
முன்பு நமக்கு நன்மை செய்தவர் கொல்லுதலைப் போல் துன்பம் செய்தாலும்,
அடுத்து
“அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்“
அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்துப் பார்க்க அத்துன்பம் கெடும்.
அதாவது
முன்பு நமக்கு நன்மை செய்தவர் கொல்லுதலைப் போல் துன்பம் செய்தாலும், அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்துப் பார்க்க அத்துன்பம் கெடும்.
செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”
இதில்
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்“
இதன் பொருள்
எந்த அறத்தை அழித்தவர்களுக்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டு.
அடுத்து
“உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு“
இதன் பொருள்
ஆனால் ஒருவன் செய்த உதவியை மறந்தவர்க்கு அதிலிருந்து இருந்து தப்பிக்க வழியே இல்லை.
அதாவது
எந்த அறத்தை அழித்தவர்களுக்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டு. ஆனால் ஒருவன் செய்த உதவியை மறந்தவர்க்கு அதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை.
செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு செய்ந்நன்றி அறிதல் அதிகாரம் முடிவடைந்தது. அடுத்ததாக வரும் அதிகாரம் பன்னிரண்டாவது அதிகாரமான நடுவு நிலைமை.
நன்றி! வணக்கம்!