இன்றைய பகுதியில் திருக்குறளின் 23வது அதிகாரமான ஈகையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கப் போகிறோம்.
வறுமையில் வாழ்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பசி தீர்க்கும் உணவு கொடுப்பது ஈகையாகும். உணவு இல்லாமல் இந்த உலகில் யாரும் வாழ முடியாது. இல்லை என்று சொல்லாமல் பிறரின் பசியைத் தீர்க்கும் அறம் முதன்மையானது. பசி தீர்க்கும் இந்த ஈகை குணத்தின் சிறப்பை இந்த அதிகாரம் எடுத்துக் காட்டுகிறது.
ஈகை-1
- முதல் குறள்.
“வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து“.
இதில்
‘வறியார்க்கொன்று ஈவதே ஈகை‘
இதன் பொருள்
ஏதும் இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே ஈகை ஆகும்.
அடுத்து
‘மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து‘
இதன் பொருள்
அப்படி இல்லாதவர்களுக்குக் கொடுப்பது பின் வரும் பயனைக் கருதிக் கொடுப்பதாகும்.
அதாவது
ஏதும் இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே ஈகை ஆகும். அப்படி இல்லாதவர்களுக்குக் கொடுப்பது பின் வரும் பயனைக் கருதிக் கொடுப்பதாகும்.
ஈகை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று“.
இதில்
‘நல்லாறு எனினும் கொளல்தீது‘
இதன் பொருள்
பிறரிடம் யாசிப்பது நன்னெறி என்று சொன்னாலும் பிறரிடமிருந்து பொருளைப் பெறக்கூடாது.
அடுத்து
‘மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று‘
இதன் பொருள்
ஈகையினை செய்தால் மேலுலகம் அடைய முடியாதென்று சொன்னாலும் ஈதலே நன்று.
அதாவது
பிறரிடம் யாசிப்பது நன்னெறி என்று சொன்னாலும் பிறரிடமிருந்து பொருளைப் பெறக்கூடாது. ஈகையினை செய்தால் மேலுலகம் அடைய முடியாதென்று சொன்னாலும் ஈதலே நன்று.
ஈகை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள“.
இதில்
‘இலனென்னும் எவ்வம் உரையாமை‘
இதன் பொருள்
தான் வறியவன் என்று ஒருவன் சொல்வதற்கு முன்
அடுத்து
‘ஈதல்‘
இதன் பொருள்
கொடுத்தல்
அடுத்து
‘குலனுடையான் கண்ணே உள‘
இதன் பொருள்
நல்ல குடியில் பிறந்தவர்களிடம் மட்டுமே உள்ள குணமாகும்.
அதாவது
தான் வறியவன் என்று ஒருவன் சொல்வதற்கு முன் கொடுத்தல், நல்ல குடியில் பிறந்தவர்களிடம் மட்டுமே உள்ள குணமாகும்.
ஈகை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு“.
இதில்
‘இன்னாது இரக்கப் படுதல்‘
இதன் பொருள்
யாசிப்பது மட்டும் இல்லாமல் யாசிக்கப்படுவதும் துன்பமானது.
அடுத்து
‘இரந்தவர் இன்முகம் காணும் அளவு‘
ஒரு பொருளை யாசிப்பவரது மலர்ந்த முகத்தைக் காணும் வரை
அதாவது
ஒரு பொருளை யாசிப்பவரது மலர்ந்த முகத்தைக் காணும் வரை யாசிப்பது மட்டும் இல்லாமல் யாசிக்கப்படுவதும் துன்பமானது.
ஈகை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள.
“ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்“.
இதில்
‘ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல்‘
இதன் பொருள்
தவவலிமை உடையவர்களின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளுதல் ஆகும்.
அடுத்து
‘அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்‘
இதன் பொருள்
அந்த வலிமையும் பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்குப் பின் தான் வலிமையாகும்.
அதாவது
தவவலிமை உடையவர்களின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளுதல் ஆகும். அந்த வலிமையும் பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்குப் பின் தான் வலிமையாகும்.
ஈகை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த ஐந்தாவது குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. அடுத்து உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.
நன்றி! வணக்கம்!