இதற்கு முந்தைய பகுதியில் திருக்குறளின் பதினான்காவது அதிகாரமான ஒழுக்கமுடைமையில் இருந்து முதல் ஐந்து குறள்களைப் பொருளோடு பார்த்தோம். மீதி உள்ள ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.
ஒழுக்கம் வாழ்க்கையில் உயர்வைத் தரும். ஒழுக்கமுடைமையால் ஏற்படும் உயர்வையும் ஒழுக்கம் இல்லாததால் ஏற்படும் இழிவையும் இந்த அதிகாரம் எடுத்து் கூறுகிறது.
ஒழுக்கமுடைமை 2
- ஆறாவது குறள்.
“ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.“
இதில்
“ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்“
இதன் பொருள்
மனவலிமை உடைய பெரியவர்கள் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்கள்.
அடுத்து
“இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து“
இதன் பொருள்
ஒழுக்கம் இழந்தால் குற்றம் உண்டாகும் என்பதை அறிந்த
அதாவது
ஒழுக்கம் இழந்தால் குற்றம் உண்டாகும் என்பதை அறிந்த மனவலிமை உடைய பெரியவர்கள் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்கள்.
ஒழுக்கமுடைமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி”.
இதில்
“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை“
இதன் பொருள்
எல்லோரும் ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்“
அடுத்து
இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.
இதன் பொருள்
ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
அதாவது
எல்லோரும் ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்.
ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
ஒழுக்கமுடைமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.“
இதில்
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்“
இதன் பொருள்
ஒருவனுக்கு நல்லொழுக்கம் இப்பிறவியிலும் மறுபிறவியிலும் இன்பம் பயக்கும்.
அடுத்து
“தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்“
இதன் பொருள்
தீயொழுக்கமோ எப்பொழுதும் துன்பத்தைக் கொடுக்கும்.
அதாவது
ஒருவனுக்கு நல்லொழுக்கம் இப்பிறவியிலும் மறுபிறவியிலும் இன்பம் பயக்கும். தீயொழுக்கமோ எப்பொழுதும் துன்பத்தைக் கொடுக்கும்.
ஒழுக்கமுடைமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.“
இதில்
“ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே“
இதன் பொருள்
ஒழுக்கம் உடையவர்க்கு பொருந்தாது
அடுத்து
“தீய வழுக்கியும் வாயாற் சொலல்“
இதன் பொருள்
மறந்தும் கூட தீய சொற்களை தன் வாயால் சொல்வது
அதாவது
மறந்தும் கூட தீய சொற்களை தன் வாயால் சொல்வது ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாது.
ஒழுக்கமுடைமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்“.
இதில்
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்“
இதன் பொருள்
உலகத்து உயர்ந்தோர்களோடு பொருந்துமாறு நடந்து கொள்ள வேண்டியதைக் கல்லாதவர்கள்
அடுத்து
“பலகற்றும் அறிவிலா தார்“
இதன் பொருள்
பல நூல்களைக் கற்றறிந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
அதாவது
உலகத்து உயர்ந்தோர்களோடு பொருந்துமாறு நடந்து கொள்ள வேண்டியதைக் கல்லாதவர்கள் பல நூல்களைக் கற்றறிந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
ஒழுக்கமுடைமைஅதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு ஒழுக்கமுடைமை அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து நாம் பார்க்கப்போகும் அதிகாரம் பொறையுடைமை.
நன்றி! வணக்கம்!