தெரிந்து தெளிதல் – 1

திருக்குறளின் 51வது அதிகாரமான தெரிந்துதெளிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப் போகிறோம்.

தெரிந்துதெளிதல் என்றால் ஆராய்ந்து தெளிவடைதல் ஆகும். எந்தச் செயலையும் செய்வதற்கு முன் அதை எப்படி செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று ஒரு தெளிவுடன் செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் கூறுகிறது.

தெரிந்து தெளிதல் – 1

  • முதல் குறள்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.’

இதில்
அறம்பொருள் இன்பம் உயிரச்சம்
இதன் பொருள்
அறம், பொருள், இன்பம், உயிர் பயம் ஆகிய.
அடுத்து
நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்
நான்கும் ஆராய்ந்த பின் ஒருவனை எந்த ஒரு தொழிலுக்கும் தேர்வு செய்ய வேண்டும்.

அதாவது
அறம், பொருள், இன்பம், உயிர் பயம் ஆகிய நான்கும் ஆராய்ந்த பின் ஒருவனை எந்த ஒரு தொழிலுக்கும் தேர்வு செய்ய வேண்டும்.

தெரிந்துதெளிதல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.

  • இரண்டாவது குறள்.

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு
.”
இதில்
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி
இதன் பொருள்
நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றங்கள் ஏதும் இல்லாதவனாய்.
அடுத்து
‘வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு
இதன் பொருள்
பழிக்கு அஞ்சி வெட்கப்படுபவனையே தேர்வு செய்வது தலைமைக்குத் தெளிவாகும்.

அதாவது
நல்ல குடும்பத்தில் பிறந்து, குற்றங்கள் ஏதும் இல்லாதவனாய், பழிக்கு அஞ்சி வெட்கப்படுபவனையே தேர்வு செய்வது தலைமைக்குத் தெளிவாகும்.

தெரிந்துதெளிதல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.

  • மூன்றாவது குறள்.

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

இதில்
அரியகற்று ஆசற்றார் கண்ணும்’
இதன் பொருள்
சிறந்த நூல்களைக் கற்று குற்றம் எதுவும் இல்லாதவரிடத்திலும்.
அடுத்து
தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு
இதன் பொருள்
நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இருக்காது.

அதாவது
சிறந்த நூல்களைக் கற்று குற்றம் எதுவும் இல்லாதவரிடத்திலும் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இருக்காது.

தெரிந்துதெளிதல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.

  • நான்காவது குறள்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

இதில்
குணம்நாடி
இதன் பொருள்
ஒருவருடைய குணத்தை ஆராய்ந்து.
அடுத்து
குற்றமும் நாடி
இதன் பொருள்
குற்றத்தையும் ஆராய்ந்து.
அடுத்து
அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்
இதன் பொருள்
இந்த இரண்டிலும் எது அதிகமாக உள்ளது என்று ஆராய்ந்து அவனை அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது
ஒருவருடைய குணத்தை ஆராய்ந்து, குற்றத்தையும் ஆராய்ந்து இந்த இரண்டிலும் எது அதிகமாக உள்ளது என்று ஆராய்ந்து அவனை அறிந்து கொள்ள வேண்டும்.

தெரிந்துதெளிதல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.

  • ஐந்தாவது குறள்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.”

இதில்
‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்
இதன் பொருள்
ஒருவனுடைய குணத்தால் ஆகிய பெருமைக்கும், மற்றைய குற்றங்களால் ஆகிய சிறுமைக்கும்.
அடுத்து
தத்தம் கருமமே கட்டளைக் கல்’
இதன் பொருள்
உரைகல்லாக இருப்பது அவன் செய்கின்ற செயல்களே ஆகும்.

அதாவது
ஒருவனுடைய குணத்தால் ஆகிய பெருமைக்கும், மற்றைய குற்றங்களால் ஆகிய சிறுமைக்கும் உரைகல்லாக இருப்பது அவன் செய்கின்ற செயல்களே ஆகும்.

தெரிந்துதெளிதல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.

இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பாரப்போம்.

நன்றி! வணக்கம்!

 
 

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags