இதற்கு முந்தைய பகுதியில் இடனறிதல் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களைப் பாரத்தோம். இடனறிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பார்கலாம்.
இடனறிதல் என்பதற்குப் பொருள் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ற இடத்தை அறிந்து செயல்படுவதாகும். செயல்களில் வெற்றி அடைவதற்கும், எதிரிகளைத் தோல்வி அடையச் செய்யும் ஏற்ற இடத்தை அறிந்து செய்ய வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
இடனறிதல் – 2
- ஆறாவது குறள்.
“கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.”
இதில்
‘கடலோடா கால்வல் நெடுந்தேர்’
இதன் பொருள்
வலிமையான சக்கரங்களை உடைய பெரிய தேர்கள் கடலில் ஓடாது.
அடுத்து
‘கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து’
இதன் பொருள்
கடலில் ஓடும் கப்பல்களும் நிலத்தில் ஓட முடியாது.
அதாவது
வலிமையான சக்கரங்களை உடைய பெரிய தேர்கள் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல்களும் நிலத்தில் ஓட முடியாது.
இடனறிதல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.‘
இதில்
‘அஞ்சாமை அல்லால் துணைவேண்டா‘
இதன் பொருள்
பகைக்கு அஞ்சாத மன உறுதி போதும்.வேறு துணை தேவையில்லை.
அடுத்து
‘எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின்‘
இதன் பொருள்
செய்யும் செயல்களை இடைவிடாது எண்ணி இடமறிந்து செய்தால்.
அதாவது
செய்யும் செயல்களை இடைவிடாது எண்ணி இடமறிந்து செய்தால் பகைக்கு அஞ்சாத மன உறுதி போதும். வேறு துணை தேவையில்லை.
இடனறிதல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.”
இதில்
‘சிறுபடையான் செல்லிடம் சேரின்’
இதன் பொருள்
சிறிய படை உடையவனின் இருக்கும் இடத்தைத் தேடிப் போனால்.
அடுத்து
‘உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்’
இதன் பொருள்
பெரிய படை உடையவனின் பெருமை அழியும்.
அதாவது
சிறிய படை உடையவனின் இருக்கும் இடத்தைத் தேடிப் போனால் பெரிய படை உடையவனின் பெருமை அழியும்.
இடனறிதல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.“
இதில்
‘சிறைநலனும் சீரும் இலரெனினும்’
இதன் பொருள்
வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவராயினும்.
அடுத்து
‘மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது’
எதிரிகளை அவர்கள் இடத்திற்கே சென்று தாக்குவது கடினமாகும்.
அதாவது
வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவராயினும் எதிரிகளை அவர்கள் இடத்திற்கே சென்று தாக்குவது கடினமாகும்.
இடனறிதல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.”
இதில்
‘காலாழ் களரில் நரியடும்’
இதன் பொருள்
கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால் நரி கூட அதைக் கொன்று விடும்.
அடுத்து
‘கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு’
பாகனுக்கு அடங்காததும் வேல் ஏந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை.
அதாவது
பாகனுக்கு அடங்காததும் வேல் ஏந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால் நரி கூட அதைக் கொன்று விடும்.
இடனறிதல் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. அடுத்த பகுதியில் நாம் பாரக்கப்போகும் அதிகாரம் தெரிந்து தெளிதல்.
நன்றி! வணக்கம்!



