இதற்கு முந்தைய பகுதியில் திருக்குறளின் 40வத அதிகாரமான கல்வியிலிருந்து முதல் ஐந்து குறள்களை பாரத்தோம். இந்த அதிகாரத்தின் மீதி உள்ள ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பார்கப்போகிறோம்.
சமுதாய வளர்ச்சிக்குக் கல்வி மிக இன்றியமையாத்தாகும். கல்வி அறிவை வளர்க்கும். கற்ற கல்வி அழியாதது. கல்விச் செல்வம் இருந்தால் உலகில் எந்தப் பகுதியிலும் நம்பிக்கையோடு வாழ முடியும். இந்த அதிகாரம் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.
கல்வி -2
- ஆறாவது குறள்.
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.”
இதில்
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’
இதன் பொருள்
மணலில் உள்ள கேணியானது தோண்டிய அளவுதான் நீரினை சுரக்கும்.
அடுத்து
‘மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு’
அதுபோல மக்களுக்குக் கற்ற கல்வி அளவுதான் அறிவும் வளரும்.
அதாவது
மணலில் உள்ள கேணியானது தோண்டிய அளவுதான் நீரினை சுரக்கும். அதுபோல மக்களுக்குக் கற்ற கல்வி அளவுதான் அறிவும் வளரும்.
கல்வி அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.”
இதில்
‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்‘
இதன் பொருள்
கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாகும். எல்லா ஊரும் சொந்த ஊராகும். அப்படியிருக்க ஒருவன்.
அடுத்து
‘சாந்துணையுங் கல்லாத வாறு‘
இதன் பொருள்
சாகும் வரையில் கல்லாமல் கழிப்பதேன்?
அதாவது
கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாகும். எல்லா ஊரும் சொந்த ஊராகும். அப்படியிருக்க ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் கழிப்பதேன்?
கல்வி அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.”
இதில்
‘ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு‘
இதன் பொருள்
ஒருவனுக்குத் ஒரு பிறப்பில் கற்ற கல்வியானது.
அடுத்து
‘எழுமையும் ஏமாப் புடைத்து‘
இதன் பொருள்
ஏழு பிறப்பிலும் கூடவே சென்று உதவும்.
அதாவது
ஒருவனுக்குத் ஒரு பிறப்பில் கற்ற கல்வியானது ஏழு பிறப்பிலும் கூடவே சென்று உதவும்.
கல்வி அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள்.
- ஒன்பதாவது குறள்.
“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.”
இதில்
‘தாமின் புறுவது உலகின் புறக்கண்டு‘
இதன் பொருள்
தாம் இன்பமடைவதற்கு காரணமாகிய கல்வியால் உலகம் இன்பமடைவதைக் கண்டு.
அடுத்து
‘காமுறுவர் கற்றறிந் தார்‘
இதன் பொருள்
கற்றறிந்தவர் மேன்மேலும் அக்கல்வியையே பெரிதும் விரும்புவர்.
அதாவது
தாம் இன்பமடைவதற்கு காரணமாகிய கல்வியால் உலகம் இன்பமடைவதைக் கண்டு கற்றறிந்தவர் மேன்மேலும் அக்கல்வியையே பெரிதும் விரும்புவர்.
கல்வி அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.”
இதில்
‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு‘
இதன் பொருள்
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வமானது கல்வி ஆகும்.
அடுத்து
‘மாடல்ல மற்றை யவை‘
இதன் பொருள்
கல்வியைத் தவிர மற்றைய செல்வங்கள் எல்லாம் செல்வம் அல்ல.
அதாவது
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வமானது கல்வி ஆகும். கல்வியைத் தவிர மற்றைய செல்வங்கள் எல்லாம் செல்வம் அல்ல.
கல்வி அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது.
அடுத்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் கல்லாமை.
நன்றி! வணக்கம்!



