பெரியாரைத் துணைக்கோடல் – 1
இந்தப் பகுதியில் நாம் பாரக்கப்போவது திருக்குறளின் 45வது அதிகாரமான பெரியாரைத் துணைக்கோடல்.
வயதில் பெரியவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவம் அதிகமாக இருக்கும். அவர்கள் அறிவிலும், சிந்தித்து செயல்படுவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். தவறுகள் நிகழாவண்ணம் செயல்படுவார்கள். இந்த அதிகாரம் பெரியவர்களின் துணையை நாடுவதால் வரும் பயனையும், அப்படி துணையை நாடாமல் இருப்பதால் வரும் குற்றத்தையும் எடுத்துக் கூறுகிறது.
- முதல் குறள்.
“அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்”.
இதில்
‘அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை’
இதன் பொருள்
அறத்தின் சிறப்பை அறிந்து தன்னை விட மூத்த அறிவுடைய பெரியவர்களின் நட்பை.
அடுத்து
‘திறனறிந்து தேர்ந்து கொளல்’
இதன் பொருள்
துணையாகக் கொள்ளும் வகையை ஆராயந்து அறிந்து கொள்ள வேண்டும்.
அதாவது
அறத்தின் சிறப்பை அறிந்து தன்னை விட மூத்த அறிவுடைய பெரியவர்களின் நட்பைத் துணையாகக் கொள்ளும் வகையை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்”.
இதில்
‘உற்றநோய் நீக்கி’
இதன் பொருள்
தனக்கு வரும் துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து நீக்கி.
அடுத்து
‘உறாஅமை முற்காக்கும் பெற்றியார்’
இதன் பொருள்
பின் அவை மிண்டும் வராமல் முன்னதாகக் காக்கும் தன்மை உடையவர்களை.
அடுத்து
‘பேணிக் கொளல்’
இதன் பொருள்
போற்றி அவர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
அதாவது
தனக்கு வரும் துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து நீக்கிப் பின் அவை மிண்டும் வராமல் முன்னதாகக் காக்கும் தன்மை உடையவர்களைப் போற்றி அவர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்”.
இதில்
‘அரியவற்றுள் எல்லாம் அரிதே’
இதன் பொருள்
அரிய செல்வங்கள் எல்லாவற்றிலும் அரியதாகும்.
அடுத்து
‘பெரியாரைப் பேணித் தமராக் கொளல்‘
இதன் பொருள்
அறிவுடைய பெரியோர்களை அவர்களுக்கு விருப்பமானவைகளை செய்து தனக்கு சிறந்த துணையாகக் கொள்வது.
அதாவது
அறிவுடைய பெரியோர்களை அவர்களுக்கு விருப்பமானவைகளை செய்து தனக்கு சிறந்த துணையாகக் கொள்வது அரிய செல்வங்கள் எல்லாவற்றிலும் அரியதாகும்.
பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.”
இதில்
‘தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்‘
இதன் பொருள்
அறிவு முதலியவற்றால் தம்மைவிட உயரந்தவரை தமக்கு உரியவராகக் கொண்டு அவர் வழி நடந்து கொள்ளுதல்.
அடுத்து
‘வன்மையுள் எல்லாம் தலை’
இதன் பொருள்
எல்லா வலிமைகளிளும் சிறந்ததாகும்.
அதாவது
அறிவு முதலியவற்றால் தம்மைவிட உயரந்தவரை தமக்கு உரியவராகக் கொண்டு அவர் வழி நடந்து கொள்ளுதல் எல்லா வலிமைகளிளும் சிறந்ததாகும்.
பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்”.
இதில்
‘சூழ்வார்கண் ணாக ஒழுகலான்’
இதன் பொருள்
தன்னை சூழ்ந்துள்ள பெரியோர்களைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால்.
அடுத்து
‘மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்‘
இதன் பொருள்
மன்னவனும் அவ்வாறு தன்னை சூழ்ந்துள்ளவர்களை ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்.
அதாவது
தன்னை சூழ்ந்துள்ள பெரியோர்களைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் மன்னனும் அவ்வாறு தன்னை சூழ்ந்துள்ளவர்களை ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்.
பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!



