திருக்குறளின் 24வது அதிகாரம் புகழ். இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம். புகழ் வாழ்க்கையில் நல்ல அறங்களைக் கடைப்பிடித்துச் செய்யும் நற்செயல்களாலும் நற்பண்புகளாலும் கிடைக்கும்.பிறர் நம்மை இகழாமல் புகழோடு வாழ்ந்து மறைய வேண்டும். ஒருவன் இறந்த பின்னும் மறையாமல் இருப்பது புகழ் ஒன்றுதான்.புகழ் இல்லாமல் வாழ்கின்றவர்கள் உயிரோடு இருந்தாலும் வாழாதவர்கள் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
புகழ் 1
- முதல் குறள்.
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு“.
இதில்
‘ஈதல்‘
இதன் பொருள்
வறியவர்களுக்குக் கொடுத்தல் வேண்டும்.
அடுத்து
‘இசைபட வாழ்தல்‘
இதன் பொருள்
அதனால் புகழ் பெற்று வாழவேண்டும்.
அடுத்து
‘அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு‘
இதன் பொருள்
அந்த புகழ் இல்லாமல் மக்கள் உயிர்க்கு வேறு பயன் இல்லை.
அதாவது
வறியவர்களுக்குக் கொடுத்தல் வேண்டும். அதனால் புகழ் பெற்று வாழவேண்டும். அந்த புகழ் இல்லாமல் மக்கள் உயிர்க்கு வேறு பயன் இல்லை.
புகழ் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்“.
இதில்
‘உரைப்பார் உரைப்பவை எல்லாம்‘
இதன் பொருள்
புகழ்ந்து சொல்லுபவர்கள் சொல்வதெல்லாம்
அடுத்து
‘இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்‘
இதன் பொருள்
வறுமையால் யாசிப்பவர்க்குக் கொடுப்பதால் ஒருவர்க்கு உண்டாகும் புகழே ஆகும்.
அதாவது
புகழ்ந்து சொல்லுபவர்கள் சொல்வதெல்லாம் வறுமையால் யாசிப்பவர்க்குக் கொடுப்பதால் ஒருவர்க்கு உண்டாகும் புகழே ஆகும்.
புகழ் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்“
இதில்
‘ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்‘
இதன் பொருள்
தனக்கு நிகரில்லாத ஓங்கிய புகழ் அல்லாமல்
அடுத்து
‘பொன்றாது நிற்பதொன் றில்‘
இதன் பொருள்
இந்த உலகத்தில் அழியாமல் நிற்பது வேறு ஒன்றும் இல்லை.
அதாவது
தனக்கு நிகரில்லாத ஓங்கிய புகழ் அல்லாமல் இந்த உலகத்தில் அழியாமல் நிற்பது வேறு ஒன்றும் இல்லை.
புகழ் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு“.
இதில்
‘நிலவரை நீள்புகழ் ஆற்றின்‘
இதன் பொருள்
இவ்வுலகின் எல்லைக்குள் அழியாத புகழை உண்டாக்கச் செய்தால்
அடுத்து
‘புலவரைப் போற்றாது புத்தேள் உலகு‘
இதன் பொருள்
உலகம் ஞானிகளைப் போற்றாது, புகழ் செய்தாரைப் போற்றும்.
அதாவது
இவ்வுலகின் எல்லைக்குள் அழியாத புகழை உண்டாக்கச் செய்தால் உலகம் ஞானிகளைப் போற்றாது, புகழ் செய்தாரைப் போற்றும்.
புகழ் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது“.
இதில்
‘நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்‘
இதன் பொருள்
புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும்
அடுத்து
‘வித்தகர்க் கல்லால் அரிது‘
இதன் பொருள்
அறிவில் சிறந்தவர்க்கு இல்லாமல் மற்றவர்க்குக் கடினமாகும்.
அதாவது
புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும், அறிவில் சிறந்தவர்க்கு இல்லாமல் மற்றவர்க்குக் கடினமாகும்.
புகழ் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த பகுதி இதோடு முடிவடைந்தது. மீதி உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.
நன்றி! வணக்கம்!