இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் புறங்கூறாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள். முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம்.
புறங்கூறாமை என்றால் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத சமயத்தில் அவரை இழிவாகவும் தவறாகவும் பேசுவது ஆகும். புறங்கூறாமல் இருப்பதால் உண்டாகும் நன்மைகளையும் புறங்கூறுவதால் உண்டாகும் துன்பங்களையும் இந்த அதிகாரம் சொல்கிறது.
புறங்கூறாமை 2
- ஆறாவது குறள்.
“பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்“.
இதில்
‘பிறன்பழி கூறுவான்‘
இதன் பொருள்
பிறரைப்பற்றி புறங்கூறுபவன்
அடித்து
‘தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்’
இதன் பொருள்
அவனுடைய பழிகள் பலவற்றிலும் வருந்தும் தன்மையை ஆராய்ந்து பிறரால் பழிக்கப்படுவான்.
அதாவது
பிறரைப் பற்றிப் புறங்கூறுபவன் அவனுடைய பழிகள் பலவற்றிலும் வருந்தும் தன்மையை ஆராய்ந்து பிறரால் பழிக்கப்படுவான்.
புறங்கூறாமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்“.
இதில்
‘பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்‘
இதன் பொருள்
புறம் பேசி நண்பர்களைத் தம்மை விட்டுப் பிரியும்படி செய்வர்
அடுத்து
‘நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்‘
இதன் பொருள்
இனிய சொற்களைக் கூறி நட்புச் செய்தலின் நன்மையை அறியாதவர்
அதாவது
இனிய சொற்களைக் கூறி நட்புச் செய்தலின் நன்மையை அறியாதவர் புறம் பேசி நண்பர்களைத் தம்மை விட்டுப் பிரியும்படி செய்வர்.
புறங்கூறாமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு“.
இதில்
‘துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்‘
இதன் பொருள்
தம்மிடம் நெருங்கிப் பழகியவர்களின் குற்றத்தையும் அவர்கள் இல்லாதபோது புறங்கூறித் தூற்றிப் பேசுபவர்கள்
அடுத்து
‘என்னைகொல் ஏதிலார் மாட்டு’
பழகாத மற்றவர்களிடம் என்ன செய்வார்களோ?
அதாவது
தம்மிடம் நெருங்கிப் பழகியவர்களின் குற்றத்தையும் அவர்கள் இல்லாதபோது புறங்கூறித் தூற்றிப் பேசுபவர்கள் பழகாத மற்றவர்களிடம் என்ன செய்வார்களோ?
புறங்கூறாமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை“.
இதில்
‘அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம்‘
இதன் பொருள்
இவனையும் தாங்குவதுதான் அறம் என்று இந்த பூமி சுமக்கின்றதோ?
அடுத்து
‘புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை‘
இதன் பொருள்
பிறர் இல்லாதபோது அவரைப் பற்றிப் புறங்கூறிப் பேசுபவனுடைய உடல் பாரத்தை
அதாவது
பிறர் இல்லாதபோது அவரைப் பற்றிப் புறங்கூறிப் பேசுபவனுடைய உடல் பாரத்தை இவனையும் தாங்குவதுதான் அறம் என்று இந்த பூமி சுமக்கின்றதோ?
புறங்கூறாமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு“.
இதில்
‘ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்’
இதன் பொருள்
பிறருடைய குற்றத்தினுப் புறம் பேசுவது போல தன் குற்றத்தையும் காணும் தன்மை உடையவனாக இருந்தால்
அடுத்து
‘தீதுண்டோ மன்னும் உயிர்க்கு’
அவனுடைய நிலைப்பெற்ற உயிர்க்குத் துன்பம் உண்டோ?
அதாவது
பிறருடைய குற்றத்தினைப் புறம் பேசுவது போல தன் குற்றத்தையும் காணும் தன்மை உடையவனாக இருந்தால் அவனுடைய நிலைப்பெற்ற உயிர்க்குத் துன்பம் உண்டோ?
புறங்கூறாமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. அடுத்து வரும் பகுதியில் திருக்குறளின் 20வது அதிகாரமான பயனில சொல்லாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கப்போகிறோம்.
நன்றி! வணக்கம்!