குற்றங்கடிதல் – 1

திருக்குறளின் 44வது அதிகாரமான குற்றங்கடிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்தப் பகுதியில் பாரக்கப்போகிறோம்.

குற்றங்கடிதல்
என்றால் நம்மிடம் உள்ள குறைகளை அறிந்து அவைகளை நீக்கிக் கொள்வதாகும். இந்த அதிகாரம் ஒரு தலைவனிடம் உள்ள கோபம், பொறாமை, கர்வம், பிறர்க்கு கொடுத்து உதவாமல் பொருள் சேர்ப்பது இப்படி உள்ள தீய குணங்களை நீக்கச் சொல்கிறது. இது தலைவனுக்கு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பொருந்தும்.

குற்றங்கடிதல் – 1

  • முதல் குறள்.

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

இதில்
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம்
இதன் பொருள்
தான் என்ற அகங்காரம் கோபம், பெண்ணாசை போன்ற குற்றங்கள் இல்லாத அரசனது செல்வம்
அடுத்து
பெருமித நீர்த்து
இதன் பொருள்
மேன்மையானதாகும்.

அதாவது
தான் என்ற அகங்காரம், கோபம், பெண்ணாசை போன்ற குற்றங்கள் இல்லாத அரசனது செல்வம் மேன்மையானதாகும்.

குற்றங்கடிதல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.

  • இரண்டாவது குறள்.

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.”

இதில்
இவறலும்’
இதன் பொருள்
பொருள் கொடாத தன்மையும்
அடுத்து
‘மாண்பிறந்த மானமும்
இதன் பொருள்
மாண்பில்லாத மானமும்
அடுத்து
மாணா உவகையும்’
இதன் பொருள்
தகுதி இல்லாத மகிழ்ச்சியும்
அடுத்து
ஏதம் இறைக்கு’
இதன் பொருள்
அரசனுக்குக் குற்றங்களாகும்.

அதாவது
பொருள் கொடாத தன்மையும், மாண்பல்லாத மானமும், தகதியில்லாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றங்களாகும்.

குற்றங்கடிதல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.

  • மூன்றாவது குறள்.

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.”

இதில்
தினைத்துணையாம் குற்றம் வரினும்’
இதன் பொருள்
தினை அளவுக் குற்றம் தம்மிடத்தில் உண்டானாலும்.
அடுத்து
‘பனைத்துணையாக் கொள்வர்’
இதன் பொருள்
அதனைப் பனையளவு பெரிதாக எண்ணுவர்.
அடுத்து
பழிநாணு வார்’
இதன் பொருள்
பழிபாவங்களுக்கு அஞ்சும் பெரியவர்கள்.

அதாவது
பழிபாவங்களுக்கு அஞ்சும் பெரியவர்கள் தினை அளவுக் குற்றம் தம்மிடத்தில் உண்டானாலும் அதனைப் பனையளவு பெரிதாக எண்ணுவர்.

குற்றங்கடிதல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.

  • நான்காவது குறள்.

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.

இதில்
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
இதன் பொருள்
அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காத்தல் வேண்டும்.
அடுத்து
அற்றம் தரூஉம் பகை’
இதன் பொருள்
குற்றமே அழிவைத் தரும் பகையாகும்.

அதாவது
குற்றமே அழிவைத் தரும் பகையாகும். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காத்தல் வேண்டும்.

குற்றங்கடிதல் அதிகாரத்தின் நான்கவது குறளின் பொருள் இது.

  • ஐந்தாவது குறள்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
.”
இதில்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை’
இதன் பொருள்
குற்றம் வருவதற்கு முன்னே தன்னைக் காத்துக் கொள்ளாத அரசனின் வாழ்க்கை.
அடுத்து
எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்
இதன் பொருள்
நெருப்பின் முன் உள்ள வைக்கோல் போர்போல அழிந்து விடும்.

அதாவது
குற்றம் வருவதற்கு முன்னே தன்னைக் காத்துக் கொள்ளாத அரசனின் வாழ்க்கை நெருப்பின் முன் உள்ள வைக்கோல் போர்போல அழிந்து விடும்.

குற்றங்கடிதல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
குற்றங்கடிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்து வரும் பகுதியில் பார்ப்போம்.

நன்றி! வணக்கம்!

 
 
 

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags
Recent posts