இந்தப் பகுதியில் இடம் பெறுவது திருக்கறளின் 41வது அதிகாரமான கல்லாமை. இதற்கு முந்தைய இரண்டு பகுதிகளில் கல்வியின் சிறப்பைப் பற்றிப் பார்த்தோம். இந்த அதிகாரம் கல்லாமையினால் வரும் துன்பங்களைப் பற்றிக் கூறுகிறது. ஒரு நாட்டின் சமூகப் பிரச்சனைகள், பொருளாதாரம், வளர்ச்சி போன்றவை மக்களின் கல்வித் திறமையைப் பொறுத்து இருக்கிறது.
கல்லாமை 1
- முதல் குறள்.
“அரங்கின்றி வட்டாடி அற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.”
இதில்
‘அரங்கின்றி வட்டாடி அற்றே‘
இதன் பொருள்
சூதாடும் அரங்கினை அமைக்காமல் பகடைக்காயை உருட்டியது போல் ஆகும்.
அடுத்து
‘நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்‘
இதன் பொருள்
அறிவு நிரம்புவதற்கான நூல்களைக் கற்காமல் ஒருவன் கற்றவர் நிறைந்த சபையில் பேசுவது.
அதாவது
அறிவு நிரம்புவதற்கான நூல்களைக் கற்காமல் ஒருவன் கற்றவர் நிறைந்த சபையில் பேசுவது சூதாடும் அரங்கினை அமைக்காமல் பகடைக்காயை உருட்டியது போல் ஆகும்.
கல்லாமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.“
- மூன்றாவது குறள்.
“கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.“
இதில்
‘கல்லா தவரும் நனிநல்லர்‘
இதன் பொருள
கல்லாதவர்களும் மிக நல்லவர்கள் ஆவார்கள்.
அடுத்து
‘கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின்’
இதன் பொருள்
தம்மை உணர்ந்து கொண்டு கற்றோர் முன்னிலையில் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தால்.
அதாவது
தம்மை உணர்ந்து கொண்டு கற்றோர் முன்னிலையில் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தால் கல்லாதவர்களும் மிக நல்லவர்கள் ஆவார்கள்.
கல்லாமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது
- நான்காவது குறள்.
“கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.”
இதில்
‘கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்‘
இதன் பொருள்
கல்லாதவனுடைய அறிவு சில சமயங்களில் நன்றாக இருந்தாலும்.
அடுத்து
‘கொள்ளார் அறிவுடை யார்’
இதன் பொருள்
அறிவுடையவர்கள் அதனை அறிவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அதாவது
கல்லாதவனுடைய அறிவு சில சமயங்களில் நன்றாக இருந்தாலும் அறிவுடையவர்கள் அதனை அறிவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கல்லாமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
"கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்."
இதில்
'கல்லா ஒருவன் தகைமை'
இதன் பொருள்
நூல்களைக் கல்லாத ஒருவன் தன்னைக் கற்றவன் என்று புகழ்ந்து பேசுபவது.
அடுத்து
'தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்'
இதன் பொருள்
அதைக் கற்றவர் முன் பேச அவன் மதிப்பு கெடும்.
அதாவது
நூல்களைக் கல்லாத ஒருவன் தன்னைக் கற்றவன் என்று புகழ்ந்து பேசுபவது அதைக் கற்றவர் முன் பேச அவன் மதிப்பு கெடும்.
கல்லாமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. கல்லாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பாரப்போம்.
நன்றி! வணக்கம்!



