இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 22வது அதிகாரமான ஒப்புரவறிதல். ஒப்பு என்ற சொல்லுக்குச் சமம், இணை என்று பொருள் சொல்லலாம். வாழும் சமுதாயத்தோடு இணைந்து பிறர்க்கு இயன்ற அளவு உதவி செய்து தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ்வதே ஒப்புரவறிதல் ஆகும். தன்னலம் இல்லாமல் பொதுநலன் கருதி எதையும் எதிர்பார்க்காமல் செய்வதைப் பற்றி இந்த அதிகாரம் விளக்குகிறது. ஒப்புரவு செய்யும் போது கெடுதல்கள் வந்தாலும் ஒப்புரவை நிறுத்தாமல் செய்யவேண்டும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.
ஒப்புரவறிதல் 1
- முதல் குறள்.
“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு“.
இதில்
‘கைம்மாறு வேண்டா கடப்பாடு‘
இதன் பொருள்
அதுபோல மேகங்கள் போன்ற பெரியவர்கள் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு எதிர்பார்த்துச் செய்பவை அல்ல.
அடுத்து
‘மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு‘
இதன் பொருள்
தமக்கு நீரைத் தருகின்ற மேகங்களுக்கு உயிர்கள் என்ன கைம்மாறு செய்கின்றன?
அதாவது
தமக்கு நீரைத் தருகின்ற மேகங்களுக்கு உயிர்கள் என்ன கைம்மாறு செய்கின்றன? அதுபோல மேகங்கள் போன்ற பெரியவர்கள் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு எதிர்பார்த்துச் செய்பவை அல்ல.
ஒப்புரவறிதல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு“.
இதில்
‘தாளாற்றித் தந்த பொருளெல்லாம்‘
இதன் பொருள்
பாடுபட்டுச் சம்பாதித்த பொருள் எல்லாம்
அடுத்து
‘தக்கார்க்கு‘
இதன் பொருள்
தகுதியானவர்களுக்கு
அடுத்து
‘வேளாண்மை செய்தற் பொருட்டு‘
இதன் பொருள்
உதவி செய்வதற்கே ஆகும்
அதாவது
பாடுபட்டுச் சம்பாதித்த பொருள் எல்லாம் தகுதியானவர்களுக்கு உதவி செய்வதற்கே ஆகும்.
ஒப்புரவறிதல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
இதில்
‘புத்தேள் உலகத்தும் ஈண்டும்‘
இதன் பொருள்
தேவருலகத்திலும் இப்பூவுலகத்திலும்
அடுத்து
‘பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற‘
இதன் பொருள்
பிறர்க்கு உதவி செய்யும் ஒப்புரவைப் போல நல்ல பிற அறப்பகுதிகளைப் பெறுவது அரிதாகும்.
அதாவது
தேவருலகத்திலும் இப்பூவுலகத்திலும் பிறர்க்கு உதவி செய்யும் ஒப்புரவைப் போல நல்ல பிற அறப்பகுதிகளைப் பெறுவது அரிதாகும்.
ஒப்புரவறிதல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்“.
இதில்
‘ஒத்த தறிவான் உயிர்வாழ்வான்‘
இதன் பொருள்
ஒப்புரவை அறிந்து போற்றி உலக நடையினை அறிந்து வாழ்பவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான்.
அடுத்து
‘மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்‘
அவ்வாறு அறிந்து வாழாதவன் இறந்தவர்களுள் ஒருவனாகக் கருதப்படுவான்.
அதாவது
ஒப்புரவை அறிந்து போற்றி உலக நடையினை அறிந்து வாழ்பவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான். அவ்வாறு அறிந்து வாழாதவன், இறந்தவர்களுள் ஒருவனாகக் கருதப்படுவான்.
ஒப்புரவறிதல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு“.
இதில்
‘ஊருணி நீர்நிறைந் தற்றே‘
இதன் பொருள்
ஊர் மக்கள் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தது போலாகும்.
அடுத்து
‘உலகவாம் பேரறி வாளன் திரு‘
உலக நடையினை அறிந்து ஒப்புரவோடு வாழும் பேரறிவாளனின் செல்வம்
அதாவது
உலக நடையினை அறிந்து ஒப்புரவோடு வாழும் பேரறிவாளனின் செல்வம் ஊர் மக்கள் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தது போலாகும்.
ஒப்புரவறிதல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. மீதி உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
நன்றி! வணக்கம்!