ஊழியல் – 2

திருக்குறளின் ஊழியல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து அவரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம். ஊழ் என்ற சொல்லுக்கு முன்வினைப் பயன், விதி, கர்மா என்று சொல்லலாம். வகுத்தான் வகுத்த வகை என்று திருக்குறள் சொல்கிறது. நம் பிறப்பிற்கும், இறப்பிற்கும் நடுவில் வரும் இன்ப துன்பங்கள் ஏன் என்று தெரிவதில்லை. அப்படி நடப்பதற்குக் காரணம் ஊழ் வினைதான். தெய்வம் வகுத்த வழியில் நடக்கும் செயல்கள் அவை.

ஊழியல் – 2

  • ஆறாவது குறள்.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
“.
இதில்
பரியினும் ஆகாவாம் பாலல்ல’
இதன் பொருள்
ஊழினால் நமக்கு உரிமை இல்லாத பொருள்களை வருந்திக் காப்பாற்றினாலும் நம்மிடம் தங்காது.
அடுத்து
உய்த்துச் சொரியினும் போகா தம’
இதன் பொருள்
நமக்கு உரியவற்றை வேண்டாமென்று வெளியே தள்ளினாலும் நம்மை விட்டுப் போகாது.

அதாவது
ஊழினால் நமக்கு உரிமை இல்லாத பொருள்களை வருந்திக் காப்பாற்றினாலும் நம்மிடம் தங்காது. நமக்கு உரியவற்றை வேண்டாமென்று வெளியே தள்ளினாலும் நம்மை விட்டுப் போகாது.

ஊழியல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.

  • ஏழாவது குறள்.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது
“.
இதில்
வகுத்தான் வகுத்த வகையல்லால்’
இறைவன் விதித்த விதிப்படி அல்லாது.
அடுத்து
கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது
கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்து வைத்திருந்தாலும் அனுபவிப்பது கடினம்.

அதாவது
இறைவன் விதித்த விதிப்படி அல்லாது கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்து வைத்திருந்தாலும் அனுபவிப்பது கடினம்.

ஊழியல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.

  • எட்டாவது குறள்.

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்”
.
இதில்
துறப்பார்மன் துப்புர வில்லார்’
இதன் பொருள்
வறுமையினால் வாடும் ஏழை மக்கள் துறவறம் ஏற்பார்.
அடுத்து
உறற்பால ஊட்டா கழியு மெனின்’
இதன் பொருள்
ஊழினால் வரும் துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற விதி இல்லை என்றால்.

அதாவது
ஊழினால் வரும் துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற விதி இல்லை என்றால் வறுமையினால் வாடும் ஏழை மக்கள் துறவறம் ஏற்பார்.

ஊழியல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.

  • ஒன்பதாவது குறள்.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்”
.
இதில்
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர்
இதன் பொருள்
நல்வினையால் வரும் இன்பங்களை நல்லவை என்று கருதி மகிழ்கின்றவர்.
அடுத்து
அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்
இதன் பொருள்
தீவினையால் வரும் துன்பங்களை அனுபவிக்காமல் வருந்துவது ஏனோ?

அதாவது
நல்வினையால் வரும் இன்பங்களை நல்லவை என்று கருதி மகிழ்கின்றவர். தீவினையால் வரும் துன்பங்களை அனுபவிக்காமல் வருந்துவது ஏனோ?

ஊழியல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.

  • பத்தாவது குறள்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்”.

இதில்
ஊழிற் பெருவலி யாவுள
இதன் பொருள்
அதனால் ஊழை விட வலிமையானது வேறு எது?
அடுத்து
மற்றொன்று சூழினும் தான்முந் துறும்’
இதன் பொருள்
ஊழை விலக்கும் பொருட்டு வேறு வழியில் முயன்றாலும் அது அங்கும் நம் முன் வந்து நிற்கும்.

அதாவது
ஊழை விலக்கும் பொருட்டு வேறு வழியில் முயன்றாலும் அது அங்கும் நம் முன் வந்து நிற்கும்.
அதனால் ஊழை விட வலிமையானது வேறு எது?

ஊழியல் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.

இந்த குறளோடு ஊழியல் அதிகாரம் முடிவடைந்தது.

அடுத்த பகுதியில் இடம் பெறும் அதிகாரம் பொருட்பாலின் முதல் அதிகாரமான இறைமாட்சி.

நன்றி! வணக்கம்!

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags
Recent posts