போன பகுதியில் இறைமாட்சி அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம்.. இந்த பகுதியில் இறைமாட்சி அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களைப் பார்ப்போம்.
இறை என்ற சொல்லுக்குக் கடவுள் என்ற பொருளும் உண்டு. அரசாளுபவன் என்ற பொருளும் உண்டு. எப்படி இறைவன் படைத்தவைகளைக் காப்பாற்றுகிறானோ, அரசனும், தன் நாட்டு மக்களைக் காப்பவனாகிறான். இந்த அதிகாரம் அரசனுக்குரிய குணங்கள், கடமைகள், திறமைகள் பற்றி சொல்கிறது.
இறைமாட்சி – 2
- ஆறாவது குறள்.
“காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.”
இதில்
‘காட்சிக் கெளியன்‘
இதன் பொருள்
காண்பதற்கு எளியவனாகவும்
அடுத்து
‘கடுஞ்சொல்லன் அல்லனேல்‘
இதன் பொருள்
எவரிடமும் கடுஞ்சொல் கூறாதவானாகவும் இருந்தால்
அடுத்து
‘மீக்கூறும் மன்னன் நிலம்‘
இதன் பொருள்
அம்மன்னனுடைய நாட்டை எல்லா நிலங்களிளலும் அதாவது எல்லா நாடுகளிலும் சிறந்ததாக உலகம் புகழும்.
அதாவது
காண்பதற்கு எளியவனாகவும். எவரிடமும் கடுஞ்சொல் கூறாதவானாகவும் இருந்தால் அம்மன்னனுடைய நாட்டை எல்லா நிலங்களிலும் அதாவது எல்லா நாடுகளிலும் சிறந்ததாக உலகம் புகழும்.
இறைமாட்சி அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.’
இதில்
‘இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு‘
இதன் பொருள்
இனிய சொல்லோடு பிறர்க்கு கொடுத்துக் காப்பாற்ற வல்ல அரசனுக்கு.
அடுத்து
‘தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு‘
இதன் பொருள்
இந்த உலகம் தன் புகழோடு பொருந்தி தான் கருதியபடி அமையும்.
அதாவது
இனிய சொல்லோடு பிறர்க்கு கொடுத்துக் காப்பாற்ற வல்ல அரசனுக்கு இந்த உலகம் தன் புகழோடு பொருந்தி தான் கருதியபடி அமையும்.
இறைமாட்சி அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.”
இதில்
‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்‘
இதன் பொருள்
அரசனுக்குறிய நெறிகளுடன் ஆட்சி செய்து மக்களைத் துன்புறுத்தாமல் காப்பாற்றும் மன்னவன்.
அடுத்து
‘மக்கட்கு இறையென்று வைக்கப் படும்‘
இதன் பொருள்
பிறப்பால் மகனேயானாலும் செயலால் மக்களுக்கு இறைவன் என்று கருதப்படுவான்.
அதாவது
அரசனுக்குறிய நெறிகளுடன் ஆட்சி செய்து மக்களைத் துன்புறுத்தாமல் காப்பாற்றும் மன்னவன் பிறப்பால் மகனேயானாலும் செயலால் மக்களுக்கு இறைவன் என்று கருதப்படுவான்.
இறைமாட்சி அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு‘.
இதில்
‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்‘
இதன் பொருள்
துணையாக இருப்போர் செவிபொறுத்துக்கொள்ள முடியாத கடுஞ்சொற்களை சொன்னாலும், நன்மை கருதி பொறுத்துக் கொள்ளும் பண்புடைய அரசனது.
அடுத்து
‘கவிகைக்கீழ்த் தங்கும் உலகு‘
இதன் பொருள்
குடை நிழலில் உலகம் தங்கும்.
அதாவது
துணையாக இருப்போர் செவிபொறுத்துக்கொள்ள முடியாத கடுஞ்சொற்களை சொன்னாலும், நன்மை கருதி பொறுத்துக் கொள்ளும் பண்புடைய அரசனது குடை நிழலில் உலகம் தங்கும்.
இறைமாட்சி அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி.”
இதில்
‘கொடை‘
இதன் பொருள்
வேண்டுவோர்க்கு கொடுத்தலும்.
அடுத்து
‘யளி’
இதன் பொருள்
அன்பு காட்டுதலும்.
அடுத்து
‘செங்கோல்‘
இதன் பொருள்
நீதியுடன் ஆட்சி செய்வதும்.
அடுத்து
‘குடியோம்பல்’
இதன் பொருள்
தளர்ந்த குடிமக்களைக் காத்தலும்.
அடுத்து
‘நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி‘
இதன் பொருள்
ஆகிய இந்த நான்கும் உடையவன் வேந்தர்களுக்கெல்லாம் விளக்கு போன்றவன்.
அதாவது
வேண்டுவோர்க்கு கொடுத்தலும், அன்பு காட்டுதலும், நீதியுடன் ஆட்சி செய்வதும், தளர்ந்த குடிமக்களைக் காத்தலும் ஆகிய இந்த நான்கும் உடையவன் வேந்தர்களுக்கெல்லாம் விளக்கு போன்றவன்.
இறைமாட்சி அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து வரும் அதிகாரம் கல்வி.
நன்றி! வணக்கம்!
.



