திருக்குறளின் பத்தாவது அதிகாரமான இனியவைகூறல் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். இனிமையாகப் பேசுவதால் உண்டாகும் நன்மைகளையும் பயன்களையும் இந்த அதிகாரம் கூறுகிறது.
இனியவைகூறல்-2
- ஆறாவது குறள்.
“அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்“
இதில்
“நல்லவை நாடி இனிய சொலின்“
இதன் பொருள்
பிறர்க்கு நன்மை தரும் சொற்களை ஆரய்நது இனிமையாகச் சொன்னால்,
அடுத்து
“அல்லவை தேய அறம்பெருகும்“
இதன் பொருள்
பாவங்கள் தேய்ந்து அறம் பெருகும்.
அதாவது
பிறர்க்கு நன்மை தரும் சொற்களை ஆரய்நது இனிமையாகச் சொன்னால் பாவங்கள் தேய்ந்து அறம் பெருகும்.
இனியவை கூறல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்“
இதில்
“நயன்ஈன்று நன்றி பயக்கும்“
இதன் பொருள்
பேசுபவனுக்கு இன்பம் தந்து நன்மை பயக்கும்.
அடுத்து
“பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்“
இதன் பொருள்
நற்பயனைக் கொடுத்து இனிய பண்பிலிருந்து நீங்காத இன்சொற்கள்.
அதாவது
நற்பயனைக் கொடுத்து, இனிய பண்பிலிருந்து நீங்காத இன்சொற்கள், பேசுபவனுக்கு இன்பம் தந்து நன்மை பயக்கும்.
இனியவை கூறல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்“
இதில்
“சிறுமையுள் நீங்கிய இன்சொல்“
அதன் பொருள்
பிறர்க்குத் துன்பம் தராத இனிய சொற்கள்
அடுத்து
“மறுமையும் இம்மையும் இன்பம் தரும்“
ஒருவனுக்கு மறுபிறவியிலும் இப்பிறவியிலும் இன்பத்தைத் தரும்.
அதாவது
பிறர்க்குத் துன்பம் தராத இனிய சொற்கள் ஒருவனுக்கு மறுபிறவியிலும் இப்பிறவியிலும் இன்பத்தைத் தரும்.
இனியவை கூறல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது“
இதில்
“இன்சொல் இனிதீன்றல் காண்பான்“
இதன் பொருள்
பிறர் கூறும் இன்சொற்கள் தனக்கு இன்பத்தினைத் தரும் என்று உணர்ந்தவன்
அடுத்து
“எவன்கொலோ வன்சொல் வழங்கு வது“
பிறரிடம் கடுமையான சொற்களைப் பேசுவது என்ன பயனைக் கருதியோ?
அதாவது
பிறர் கூறும் இன்சொற்கள் தனக்கு இன்பத்தினைத் தரும் என்று உணர்ந்தவன், பிறரிடம் கடுமையான சொற்களைப் பேசுவது என்ன பயனைக் கருதியோ?
இனியவை கூறல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று“
இதில்
“இனிய உளவாக இன்னாத கூறல்“
இதன் பொருள்
அறம் பயக்கும் இனிமையான சொற்கள் தன்னிடத்தே இருக்க அவற்றைத் தவிர்த்து கடுஞ்சொற்களைக் கூறுவது
அடுத்து
“கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று“
இதன் பொருள்
கனிகள் இருக்கும் போது கசப்பான காய்களைத் தின்பது போலாகும்.
அதாவது
அறம் பயக்கும் இனிமையான சொற்கள் தன்னிடத்தே இருக்க, அவற்றைத் தவிர்த்து கடுஞ்சொற்களைக் கூறுவது கனிகள் இருக்கும் போது கசப்பான காய்களைத் தின்பது போலாகும்.
இந்த குறளோடு இனியவை கூறல் அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து வரும் அதிகாரம் செய்ந்நன்றி அறிதல். அடுத்த பகுதியில் செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்கள் இடம் பெறும்.
நன்றி! வணக்கம்!