திருக்குறளின் 17வது அதிகாரமான அழுக்காறாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.
அழுக்காறாமை என்றால் பொறாமை இல்லாமல் இருப்பது.
இந்த அதிகாரம் பொறாமையால் வரும் தீமைகளை எடுத்துக் கூறுகிறது.
அழுக்காறாமை 2
- ஆறாவது குறள்.
“கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்“.
இதில்
‘கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்‘
இதன் பொருள்
பிறர்க்குக் கொடுப்பதைப் பாரத்துப் பொறாமைப் படுகின்றவனின் சுற்றம்
அடுத்து
‘உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்‘
இதன் பொருள்
உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
அதாவது
பிறர்க்குக் கொடுப்பதைப் பாரத்துப் பொறாமைப் படுகின்றவனின் சுற்றம் உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
அழுக்காறாமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.”
இதில்
‘அழுக்காறு உடையானைச்‘
இதன் பொருள்
பிறர் உயர்வைக்கண்டு பொறாமைப் படுகின்றவனைப் பார்த்து
‘செய்யவள் அவ்வித்து தவ்வையைக் காட்டி விடும்‘
இதன் பொருள்
திருமகள் பொறாமைப்பட்டு தனது மூத்தவளான மூதேவியை அவனுக்குக் காட்டிவி்ட்டு விலகிவிடுவாள்.
அதாவது
பிறர் உயர்வைக்கண்டு பொறாமைப் படுகின்றவனைப் பார்த்து திருமகள் பொறாமைப்பட்டு தனது மூத்தவளான மூதேவியை அவனுக்குக் காட்டிவி்ட்டு விலகிவிடுவாள்.
அழுக்காறாமை அதிகாரத்தின் 7வது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.”
இதில்
‘அழுக்காறு எனஒரு பாவி‘
இதன் பொருள்
பொறாமை என்று சொல்லப்படும் ஒப்பில்லாத பாவி
அடுத்து
‘திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்‘
இதன் பொருள்
ஒருவனுடைய செல்வத்தை அழித்து அவனைத் தீய வழியில் செலுத்திவிடும்
அதாவது
பொறாமை என்று சொல்லப்படும் ஒப்பில்லாத பாவி ஒருவனுடைய செல்வத்தை அழித்து அவனைத் தீய வழியில் செலுத்திவிடும்.
அழுக்காறாமை அதிகாரத்தின் 8வது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.”
இதில்
‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்‘
இதன் பொருள்
நெஞ்சில் பொறாமை உடையவனது ஆக்கமும்
அடுத்து
‘செவ்வியான் கேடும் நினைக்கப் படும்‘
பொறாமை இல்லாத நல்லவனின் கேடும் ஆராய்ந்து அறியப்பட வேண்டும்
அதாவது
நெஞ்சில் பொறாமை உடையவனது ஆக்கமும் பொறாமை இல்லாத நல்லவனின் கேடும் ஆராய்ந்து அறியப்பட வேண்டும்.
அழுக்காறாமை அதிகாரத்தின் 9வது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.”
அடுத்து
‘அழுக்கற்று அகன்றாரும் இல்லை‘
இதன் பொருள்
பொறாமைப்பட்டுப் பெருமையுடன் வாழ்வில் உயர்ந்தோரும் இல்லை.
அடுத்து
‘அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் ‘
அந்த பொறாமை இல்லாததால் புகழ் மங்கித் தாழ்ந்தவரும் இல்லை.
அதாவது
பொறாமைப்பட்டுப் பெருமையுடன் வாழ்வில் உயர்ந்தோரும் இல்லை. அந்த பொறாமை இல்லாததால் புகழ் மங்கித் தாழ்ந்தவரும் இல்லை.
அழுக்காறாமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு அழுக்காறாமை அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து வரும் அதிகாரம் வெஃகாமை.
நன்றி! வணக்கம்!