சிறுகதைகள்–தையல்சிட்டின் வால்-Tamil Story-[Tailor bird]  

வணக்கம். விடுமுறைக்கு சோழவந்தான் வந்திருந்த தரன், சாமா, ஜோதி மூன்று பேருக்கும் நேரம் போறதே தெரியவில்லை. 24 மணி நேரம் பற்றாது போல இருந்தது.. அங்க சுத்தி இருக்கிற இயற்கை அழகில் பறவைகள், மிருகங்கள் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் ஏன், எப்படியென்று நிறைய அனுபவ பாடங்களை கற்றுக்கொண்டார்கள். அந்த மாதிரி ஒரு நாள் தரன் மாடி அறையில் ஜன்னலைத் திறந்து தோட்டத்தை வேடிக்கை பாத்துட்டு இருந்தான்.

ட்ட்ட்விட்….ட்ட்ட்விட் அப்படியென்று ஒலியும் அதுக்கு பதில் ஒலியும் கேட்டது. உடனே தரன் பைனாகுலரை எடுத்து அந்த குரல் எங்கே இருந்து வருகிறது என்று பார்த்தான். கொஞ்சம் தொலைவில் ஒரு வாத மரக்கிளையில் ஒரு தையல் சிட்டு மூன்று இலைகளை நெருக்கி வைத்து அதோட மெல்லிய நீண்ட அலகால் நார் போல ஓர் இழைய வைத்துத் தைத்துக் கொண்டிருந்தது. அப்படித் தைப்பது ஒன்றும் சுலபம் இல்லை. சாக்கு முட்டையை அப்பா கோணி ஊசியால் தைக்கிற மாதிரி இல்லை அது.

அந்த சிட்டுக்கு அந்த நெருங்கிய இலைகளை நுனிவரை தைக்க அந்த நார் பத்தல. பறந்து போயி இன்னும் கொஞ்ச நார்கள் எடுத்துட்டு வந்துச்சு. அந்த நார் விரைப்பாய் இருந்துச்சு. வாயிலிருந்து நீர வழிய விட்டு அந்த நார நனைத்தது. கொஞ்ச நேரம் பொறுமையா காத்திருந்து அது உபயோகப்படுத்தி நுனி வரைத் தைத்தது. இப்படித் தைத்துக்கொண்டு இருக்கும்போதே மூனாவது இலை பிரிஞ்சிடுச்சு. அந்த இடத்தில் அந்த தையல் சிட்டு மிகவும் கவனமாக இறுக்கி வைத்து தையல் பிரியாமல் இருக்க நுனியில் கம்பியைச் சுத்தி முடிச்சு போடுவோம் இல்ல அதே மாதிரி செய்தது. மூன்று நீண்ட இலைகளைச் சேர்த்துத் தைத்து முடிச்சது. அதோட கூடு இப்ப பார்க்க ஓர் இலை கோப்பை மாறி இருந்துச்சு. பறந்து பறந்து தேடி பூ மொட்டுக்கள், பஞ்சுத்துண்டுகள் இப்படி நிறையக் கொண்டு வந்து சேர்த்து அந்தக் கூட்ட நிறப்பிடிச்சு.. எதிர்
மரத்தில் ஒரு கிளையில் நாலஞ்சு தையல் சிட்டுக்கள் இதை வரிசையா உட்கார்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தது. தரனுக்கு வியப்பும் மகிழ்ச்சியும் தாங்க முடியவில்லை. அப்பப் பார்த்து டனார்னு ஒரு பலமான சத்தம். அவ்வளவுதான் எல்லா பறவைகளும் பறந்து போயிடுச்சு. தரன் கீழபோலாம்னு திரும்பும்போது ஜோதியும் சமன்யூவும் அங்க நின்றுகொண்டு இருந்தார்கள்.

“நீங்க எப்ப வந்தீங்க” தரன் அவங்கள பார்த்துக் கேட்டான். “அந்தச் சிட்டு இரண்டாவது நார் கொண்டு வந்ததே அப்பவே வந்துட்டோம்” இது ஜோதி. “ஏதாவது பாடும்னு டேப் ரெக்கார்டர் கூட தயாரா வச்சிருந்தேன்” சாமா தரன பார்த்து சொன்னான். “நாம பார்த்தது அப்படியே வரைஞ்சா என்ன” தரன் சொல்ல மூன்று பேரும் அந்த காட்சியை அப்படியே வரைஞ்சாங்க. நூலோ ஊசியோ இல்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் கூடு கட்டிய அந்த பறவையுடைய திறமையை வியந்தார்கள். பக்கத்து வீட்டு சீதா “வாட்டர் கலர் பாக்ஸ் இருக்கா” அப்படியென்று கேட்டுட்டே அங்க வந்தா. “நீயும் ஏதாவது ஓவியம் வரைந்து இருக்கியா என்ன” சாமா கேட்டதும் அவளுடைய கையில் சுருட்டி வைத்திருந்ததை “பாரு தையல் சிட்டுடைய படம்” அப்படியென்று காமிச்சா. சீதா
காமிச்சது பென்சிலால வரைந்தது. இவங்க மூன்று பேரும் பார்த்த வரைந்த அதே தையல் சிட்டு தான். ஆனால் வால் பக்கம் தாழ்வா இல்லாமல் நுனி சிறகுகள் இரண்டு மட்டும் குத்திட்டுநின்றுகொண்டு இருந்துச்சு.

“இது நிஜமான தையல் சிட்டு தானே வால் இப்படி ஆகாயத்தை பார்த்துட்டு இருக்கே”
அப்படியென்று ஜோதி கேட்டா. “ஆமா ஜோதி, எங்க தோட்டத்தில் எத்தனை அழகா மூன்று  இலைகளைச் சேர்த்து வைத்துத் தைத்தது தெரியுமா? அத பார்த்து தான் வரைந்தேன்” அப்படியென்று சீதா திரும்பி பதில் சொன்னா. “அப்படியா நாங்களும் எங்க தோட்டத்தில் கூடு தைத்துக்கொண்டு இருந்த தையல்சிட்டைப் பார்த்தோம். இதோ பார்” ஜோதி அவள் வரைஞ்சத காட்டினா. “என்ன அதோட வால் இப்படி மொட்டையா இருக்கிறது. அதோட வால் ஆகாயத்தை பார்க்கவேண்டுமே” சீதா ஆரம்பிக்க விவாதம் சூடு பிடித்து சண்டையா மாறும்படி இருந்துச்சு.

“கலர் பாக்ஸ் கேட்டேனு தானே இப்படி சண்டை போடுற. உன்னுடைய ஓவியம் உனக்கு
பெருசுன்னா என்னோடது எனக்கு பெருசு” சீதா பொரிஞ்சி கொட்டினா. தரன் எப்படி இந்த  இரண்டு பேரையும் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் நின்றுகொண்டு இருந்தான். சத்தம் கேட்டு அத்தைபாட்டி சரஸ்வதி அங்க வந்தாங்க. ஜோதி நடந்த விவாதத்தைச் சொல்லி “யார் வரைந்தது தப்பு பாட்டி” அப்படியென்று கேட்டா. அத்தைபாட்டியும் அந்த ஓவியங்களை வாங்கி பார்த்தாங்க. “இதற்கா சண்டை போட்டீங்க, இரண்டுமே சரிதான். ஆண் தையல் சிட்டுக்கு மட்டுமே இந்த மாதிரி சிறகுகள் முளைக்கும். வசந்த காலத்தில் தான் குடும்பம் நடத்தத் தயார்
என்று சொல்வது மாதிரி இது. இந்த மாதிரி வால் பக்கம் ரெண்டு சிறகுகள் வானை நோக்கி செங்குத்தா நிற்கும். ஒரே நேரத்தில் நாலஞ்சு கூடுகள் கூடக்கட்டும். குடும்பம் நடத்தினதற்கு அப்புறம் அதோட நெட்டை வால் சுருங்கி பழையபடி ஆகிவிடும். இந்த மாதிரி இலைகளை அழகாகத் தைத்து இணைக்கும் கலை இயற்கையின் அதிசயங்களில் ஒன்று. பூநார், தாமரைத்தண்டுகள், சிலந்தி வலை இவைகளைக் கூட பயன்படுத்தும். கூரான அலக ஊசியா பயன்படுத்தும். தைக்கத் தேர்ந்தெடுக்கும் இலைகள் பசுமையா இறுக்கமான பிணைப்புடன் இருக்கும். பெண் சிட்டுக்கள் ஆண் சிட்டுகள் கூடு கட்டுவதை வரிசையா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும். தையல் சிட்டுகளில் ஐந்து வகைள் இந்த உலகத்தில் இருக்கிறது” சரஸ்வதி பாட்டி
அழகா சொல்லி முடிச்சாங்க.

இந்த விளக்கங்களைக் கேட்டதுக்கு அப்புறம் சீதா, ஜோதி இரண்டுபேருமே சண்டை
போட்டதுக்கு மன்னிப்பு கேட்டார்கள். மறுபடியும் எல்லாரும் சேந்து வரைய ஆரம்பித்தார்கள்.

தையல் சிட்டப் பார்த்தா அது கூடு கட்டும் அழக பார்த்து ரசிங்க.
அடுத்த கதையில் மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம்

சிறுகதைகள்–தையல்சிட்டின் வால்-Tamil Story-[Tailor bird]  
Speaker: Nila

Share with Friends

You may find these interesting
வான்1-5(1)
Thirukkural-திருக்குறள்-வான்சிறப்பு 1-5
Indian story Podcasts
Masala Fairy Tales - Zulfika, Part 3
Indian story Podcasts
Masala Fairy Tales- Zulfika-Part-2
kural6-10(1)
திருக்குறள்-கடவுள் வாழ்த்து பகுதி-2 Thirukkural
Sponsored Content

Subscribe now to get notified about exclusive offers from The Issue every week!