
வணக்கம். வான்சிறப்பு அதிகாரம் மழையின் தேவையும் மழை இல்லாமல் போனால் ஏற்படும் துன்பத்தையும் கூறுகிறது. போன தடவை வான்சிறப்பு அதிகாரத்தில் இருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். இன்று அடுத்த ஐந்து குறள்களையும் பார்க்கப்போகிறோம்.
வான்சிறப்பு அதிகாரத்தில் ஆறாவது குறள்.
“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது”.
இதில் முதலடியில் உள்ள
“விசும்பின் துளிவீழின் அல்லால்”
இதன் பொருள்
வானத்திலிருந்து மழைத்துளி விழாமல் போனால்
“மற்றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது”.
ஓரறிவுடைய பசும்புல்லின் தலையைக் கூட காண்பது அரிது.
அதாவது
வானத்திலிருந்து மழைத்துளி விழாமல் போனால், ஓரறிவுடைய பசும்புல்லின் தலையைக் கூட காண்பது அரிது.
வான்சிறப்பு அதிகாரத்தில் ஆறாவது குறளின் பொருள் இது.
அடுத்து வருவது ஏழாவது குறள்
“நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்”
இதில்“எழிலி தான்நல்காதாகி விடின்”என்பதன் பொருள்
மேகம் கடலிலிருந்து நீரை எடுத்துக்கொண்டு அதன் தன்மையைக் குறைத்து மழை பெய்யாமல் போனால்
“நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்”
அளவில்லாத கடலும் வளம் குன்றி வற்றிப் போகும்.
அதாவது
மேகம் கடலிலிருந்து நீரை எடுத்துக்கொண்டு அதன் தன்மையைக் குறைத்து மழை பெய்யாமல் போனால், அளவில்லாத கடலும் வளம் குன்றி வற்றிப் போகும்.
ஏழாவது குறளின் பொருள் இது.
இனி எட்டாவது குறள்
“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு”.
இதில்
“எழிலி தான்நல்காதாகி விடின்”
என்பதன் பொருள்
மேகம் கடலிலிருந்து நீரை எடுத்துக்கொண்டு அதன் தன்மையைக் குறைத்து மழை பெய்யாமல் போனால்
“நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்”
அளவில்லாத கடலும் வளம் குன்றி வற்றிப் போகும்.
அதாவது
மேகம் கடலிலிருந்து நீரை எடுத்துக்கொண்டு அதன் தன்மையைக் குறைத்து மழை பெய்யாமல் போனால், அளவில்லாத கடலும் வளம் குன்றி வற்றிப் போகும்.
ஏழாவது குறளின் பொருள் இது.
இனி எட்டாவது குறள்
“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு”.
இதில்
“வானம் வறக்குமேல்” என்பதன் பொருள்
வானத்திலிருந்து மழை பெய்யாது போனால்
“வானோர்க்கும் ஈண்டு சிறப்பொடு பூசனை செல்லாது”
தேவர்களுக்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழாக்களும் பூஜைகளும் நடக்காது.
அதாவது
வானத்திலிருந்து மழை பெய்யாது போனால், தேவர்களுக்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழாக்களும் பூஜைகளும் நடக்காது.
வான்சிறப்பு அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
இப்போது ஒன்பதாவது குறள்
“தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்”.
இதில்
“வானம் வழங்காது எனின்” இதன் பொருள்
மழை பெய்யாது போனால்
“தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்”
இந்த அகன்ற உலகத்தில் பிறர்க்கு உதவும் தானமும், தன்னை உயர்த்தும் தவமும் இந்த இரண்டு அறங்களும் இருக்காது.
அதாவது
மழை பெய்யாது போனால், இந்த அகன்ற உலகத்தில் பிறர்க்கு உதவும் தானமும், தன்னை உயர்த்தும் தவமும் இந்த இரண்டு அறங்களும் இருக்காது.
ஒன்பதாவது குறளின் பொருள் இது.
கடைசியா பத்தாவது குறள்
“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு”.
“நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும”
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் இந்த உலக வாழ்க்கை அமையாது.
“வான்இன்று அமையாது ஒழுக்கு”
மழை இல்லை என்றால் இந்த உலகத்தில் ஒழுக்கமும்
இல்லாமல் போகும்.
அதாவது
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் இந்த உலக வாழ்க்கை அமையாது, மழை இல்லை என்றால் இந்த உலகத்தில் ஒழுக்கமும் இல்லாமல் போகும்.
இது பத்தாவது குறளின் பொருள்.
இந்த பத்து குறள்களோடு வான்சிறப்பு அதிகராம் முடிவடைகிறது. அடுத்துப் பார்க்கப்போகிற அதிகாரம் மூன்றாவது அதிகாரமான நீத்தார் பெருமை.
முதல் இரண்டு அதிகாரங்களையும் கேட்டு அடுத்து சொல்லப்போகிற மூன்றாவதுஅதிகாரத்தையும் மறக்காமல் வந்து கேளுங்கள். நன்றி! வணக்கம்!