வணக்கம்.
இதற்கு முன்னாடி கடவுள் வாழ்த்தில் முதல் ஐந்து குறள்களை பார்த்தோம்.நீங்க கேட்டு பொருளையும் புரிஞ்சிட்டிருப்பீங்க. திருவள்ளுவருக்கு கன்யாகுமரியில் முக்கடல்கள் சேருமிடத்தில் 133 அடி உயரத்திற்குச் சிலை அமைக்கப்பட்டிருக்கு. 133 அதிகாரங்கள் உள்ளதால் 133 அடி உயர சிலை வைத்திருக்கிறார்கள். திருவள்ளுவர் வாழ்ந்த இடமான மயிலாப்பூரில் அவருக்கு ஒரு கோயிலும் இருக்கிறது.
இப்போது கடவுள் வாழ்த்தில் உள்ள அடுத்த ஐந்து குறள்கள் பார்ப்போம்.
கடவுள் வாழ்த்து-2
- ஆறாவது குறள்:
பொறிவாயல் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழிக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
“பொறிவாயல் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழிக்க”
ஐம்புலன்கள் என்றால் மெய் (உடல்), வாய் (சுவை, பேச்சு)கண் (ஒளி),மூக்கு சுவாசம்)காது(ஒலி).
இந்த ஐம்புலன்களிலிருந்து பிறக்கும் ஆசைகளைத் துறந்து ஒரு பொய்யில்லாத ஒழுக்க நெறி உள்ளவர் அந்த கடவுள்.
“நெறிநின்றார் நீடுவாழ் வார்”
அந்த கடவுளின் ஒழுக்க நெறிகளை பின்பற்றினால் நிலையான வாழ்க்கையை நாம் வாழலாம்
இது ஆறாவது குறளின் பொருள்
2. ஏழாவது குறள்:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்”
தனக்கு இணையே இல்லாத கடவுளின் திருவடிகளைப் பற்றியவர்களைத் தவிர
“மனக்கவலை மாற்றல் அரிது”
மற்றவர்களுக்கு அவர்களுடைய மனக்கவலைகளை மாற்ற முடியாது.
ஏழாவது குறளின் பொருள் இது.
3. இனி எட்டாவது குறள்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்”
அறத்தின் முழுப்பொருளான, அறத்தின் கடலான அந்த கடவுளின் திருவடிகளைப் பற்றி அவரை சேர்ந்தவர்களைத் தவிர
“பிறவாழி நீந்தல் அரிது”
மற்றவர்களுக்குப் பிறவியாகிய கடலை கடப்பது கடினம். பிறவி அறுப்பது கடினம்.
இது எட்டாவது குறளின் பொருள்.
4. அடுத்தது ஒன்பதாவது குறள்.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
“கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்”
கண் இருந்தும் பார்க்க முடியாமல் செவி இருந்தும் கேட்க முடியாமல் இருப்பது போல், எட்டு குணங்களை உடைய அந்த கடவுளை
“தாளை வணங்காத் தலை”
வணங்காதவன் தலை இருந்தும் பயனில்லை.
இது ஒன்பதாவது குறளின் பொருள்.
5. பத்தாவது குறள்:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர்”
இறைவனின் திருவடிகளை சேர்ந்தவர்கள் பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும்
“நீந்தார் இறைவனடி சேராதார்”
இறைவனடி சேராதவர்களால் பிறவிக் கடலை கடக்க முடியாது. அவர்களுக்குப் பிறவிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இது பத்தாவது குறளின் பொருள்.
கடவுள் வாழ்த்து-2 இல் அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களும் முடிந்தது. அடித்த அதிகாரம் வான்சிறப்பு. அந்த வான்சிறப்பு அதிகாரத்தில் இருந்து முதல் ஐந்து குறள்களை அடுத்த தடவைபார்ப்போம்.
நன்றி! வணக்கம்!