CORONAவும் குழந்தைகளும்

  “பாட்டி இந்த கோடை விடுமுறைக்கு எங்கே போகலாம்?”  என்னுடைய பேரன் 2020 ஆரம்பத்திலேயே ஆரம்பித்தான். ஒரு வட்ட மேஜை மாநாடு போட்டு ஒவ்வொருத்தரும் ஒரு யோசனை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

மைசூர், ராஜஸ்தான்னு ஆரம்பித்து கடைசியில் சிக்கிம் போகலாமென்று ஒரு மனதா முடிவாயிற்று. சின்ன பேரன் ‘’பாட்டி இமயமலையில் ஹனுமான் தவம் இருக்கிறார். அவர அங்க பாக்க முடியுமா?” ஆவலாய் கேட்டான். கள்ளம் இல்லாத குழந்தை இல்லையா!

 விடுமுறை பயணத்துக்கு என்ன தேவை என்று ஒரு பட்டியல் தயார் செய்யக் கிளம்பினேன். என்னுடன் வே சொன்னவுடன் லை செய்யும் என் தோழியிடம் எங்களின் விடுமுறைப் பயணத்தைப் பற்றி சொன்னவுடன் “ புதுசா  ஒரு வைரஸ்  சைனாலேர்ந்து கிளம்பி உலகம் பூரா பரவ ஆரம்பித்திருக்கிறது. பயணம் செய்வது கடினமாக இருக்கலாம். எச்சரிக்கையாக இரு,” அவளிடம் இருந்து எனக்கு அறிவுரை வந்தது.

 மார்ச் இரண்டாவது வாரத்தில் மெதுவாக அந்த வைரசின் தாக்கம் காரணமாக அங்கங்கு முடக்குதல் (lockdown) ஆரம்பம் ஆனது. என் பேரன் சந்தோஷமாக பள்ளி விடுமுறை என்று சொன்னான். ஒரு வாரத்திலேயே என் பெண் “‘அம்மா, இந்த இரண்டு பசங்களையும் வீட்டில் வைத்து சமாளிக்க முடியல. வெளிலயும் கூட்டிட்டு போக முடியல,” புகார் செய்ய ஆரம்பித்து விட்டாள். பாவம் குழந்தைகள் என்ன செய்வார்கள்? வெளியிலும் செல்ல முடியாது, .பள்ளியும் இல்லை.  பள்ளி விடுமுறையும் வந்தது. யாருக்கும் எங்கும் செல்ல இயலவில்லை. குழந்தைகளைப் பக்கத்தில் உள்ள திறந்த வெளிக்குக் கூட்டிக் கொண்டு பெற்றோர்கள் விளையாடச் செய்ய வேண்டி இருந்தது. பக்கத்து வீட்டில் குழந்தைக்குப் பிறந்ந நாள். அந்தக் குழந்தையின் சினேகிதர்கள் காரில் இருந்தபடியே பிறந்த நாள்  வாழ்த்துக்களைச்  சொன்னார்கள். வீட்டின் முன்புறத் தோட்டத்தில் பரிசுகளை வைத்து விட்டு காரில் இருந்த படியே குழந்தைகள் சிற்றுண்டிகளை முடித்து விட்டுச் சென்றனர்.

 கோடை விடுமுறைக்குப் பின் மெய் நிகர் பள்ளி ( VIRTUAL SCHOOL) ஆரம்பம் ஆனது. என் சின்னப் பேரன் நாற்காலியின் கீழே தலையை வைத்துக் கொண்டு காலை நாற்காலியின் மேல் வைத்து தலைகீழாக கணினியை பார்த்துத்தான் படிப்பான். பெரியவனிடம் “அண்ணா எனக்கு 30 நிமிட இடைவேளை. உனக்கு 15 நிமிடம் தான” என்று சொல்ல வீடே இரண்டு ஆகும். பெரியவன் கண் கொத்திப் பாம்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது காணொளி விளையாட்டு (VIDEO GAMES) விளையாட முயற்சி செய்வான்.

என் தங்கையின் பெண்ணோ ரொம்ப நல்ல பெண் போல் ‘அம்மா எனக்கு இன்று முக்கியமான வகுப்பு. யாரும் என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று சொல்லி விட்டு  யூ ட்யூபில் கேலிச் சித்திரம் ( CARTOON)  பார்த்துக் கொண்டிருப்பாள். என் தோழியின் பேத்தி வகுப்பில் முக்கியமான விவாதம் ( DEBATE) நடந்து கொண்டிருக்கும் போது பங்கேற்காமல்  கேலிச் சித்திரம் (CARTOON) பார்த்ததினால் அவள் வகுப்பில் எவரும் பங்கேற்க முடியாமல் போனதால் அவளின் ஆசிரியை வீட்டிற்கு தொலைப்பேசியில் கூப்பிட்டுப் புகார் செய்து விட்டார்.

என் இன்னொரு தோழி வீட்டில் மெய் நிகர் திருமணம் ( VIRTUAL WEDDING)  ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் .வாழ்த்துக்கள், அக்ஷ்க்ஷதை, ஆசீர்வாதம் எல்லாமே காணொளி ( VIDEO) வழியாகத்தான் நடந்தது. அதைப் பார்த்து அவளின் பேத்தி பரிசுகளையும் காணொளி வழியாக காமித்து விட்டு நாமே வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டாளே பார்க்கவேண்டும்!

இந்த நிலையும் கடந்து போய் சீக்கிரமாக ஒரு தீர்வு வந்து குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும் வரை நாம் மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

பாவம் ஆசிரியர்கள்!

Share with Friends

You may find these interesting
வான்1-5(1)
Thirukkural-திருக்குறள்-வான்சிறப்பு 1-5
CBSE WORKSHEET
Word Scramble: All About India-4
cbse worksheets
Word Scramble: All About India - 3
CBSE Worksheets
Word Scramble: All About India - 2
Sponsored Content

Subscribe now to get notified about exclusive offers from The Issue every week!