நினைவலைகள்

Posted on:

எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. என்னுடைய எண்ண/மன ஓட்டங்களை வார்த்தை/எழுத்து வடிவமாகத் தொகுக்க முடிவு செய்து நீண்ட நாள் ஆகிவிட்டது. எழுத வேண்டும் என்ற உடனே ஏனோ என் மனதில் ஆங்கிலத்தில் எழுதுவதே சிறந்தது என்ற எண்ணம் மேலோங்கி நிற்க, அதையே நான்கு ஆண்டு காலமாகச் செய்து வந்தேன்.

நவம்பர் 22, 2014 அன்று திருவண்ணாமலை சென்றிருந்தேன். அங்கே ரமணாஸ்ரமத்தில் அமைதியாய் பார்வையை ஓடவிட்டேன். அப்போதுதான் தமிழில் எழுதும் இச்சிந்தனை என்னுள்ளே பிறந்தது. அதை அப்பொழுது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இச்சிந்தனை மறுபடி மறுபடி என்னுள்ளே பிறக்க

இதோ தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டேன்.

“எதற்காக எழுதுகிறாய்? என்ன எழுதப்போகிறாய்? இதை அச்சிடப்போகிறாயா………?” பல கேள்விகள் என்னை சுற்றி…..எல்லா கேள்விகளுக்கும் மௌனமே பதிலாக வந்தது. ஏனென்றால் எனக்கே இக்கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டுமே குறிக்கோள். “என்னுடைய எண்ண ஓட்டங்கள், என்னுடைய அனுபவங்கள், அதனுள்ளே எனக்கான படிப்பினைகள்” ஆகியவற்றை தொகுத்து வழங்குவதே.

என்னுடைய 60 ஆண்டுகளில் நான் இதைப் பிரிக்கும்போது, என்னுடைய பேரப்பிள்ளைகளிடமும் மற்ற குழந்தைகளிடமும், பிற ஆசிரியர்களுடனும் பகிர்ந்து கொள்ளப் போகும் சுகமான நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

எண்ண அலைகள் தொடரும்…

Share with Friends

You may find these interesting
Indian podcast on education
Teacher To Parent-School and the Adopted Child
Education in India Podcast
Teacher To Parent- Children's Life Experiences Before Adoption
Adoption in India
Teacher To Parent- Educational needs of adopted children-Introduction
Teacher to Parent education podcast in India
Why is Vocabulary Important in Learning to Read?
Sponsored Content

Subscribe now to get notified about exclusive offers from The Issue every week!